ஐஏஎஸ் நியமன சட்ட விதிகளில் திருத்தம் செய்யும் ஒன்றிய அரசின் முடிவிற்கு ஒடிசா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் சுரேஷ் சந்திர மஹாபத்ரா, முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அக்கடிதம் ஊடகங்களுடன் பகிரப்படவில்லை.
ஐஏஎஸ் (கேடர்) விதிகள், 1954 சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தம் குறித்த முன்மொழியப்பட்ட வரைவு மசோதாவானது, மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டு நடைமுறையை பின்பற்றாமலேயே, ஒன்றிய அரசுடைய பிரதிநிதித்துவத்தின்கீழ் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியமர்த்தும் அதிகாரத்தை ஒன்றிய அரசிற்கு வழங்குகிறது.
இம்முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு முறை பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார். இந்த சட்டத் திருத்தம் கூட்டாட்சி அமைப்பையும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பையும் அழித்துவிடும் என்று அவர் குற்றஞ்சாட்டி வருகிறார்.
முன்மொழியப்பட்ட சட்டத்திருத்த வரைவுக்கு மேற்கு வங்கம், தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜார்கண்ட், கேரளா, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களும் ஒன்றிய அரசின் முடிவிற்கு எதிப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளன.
மகாராஷ்டிரா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முன்மொழியப்பட்ட வரைவு மசோதாவை கடுமையாக எதிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.