Aran Sei

ஒடிசா: வறுமையின் காரணமாக பெண் குழந்தையை விற்ற பெற்றோர்

Representational image

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில், வறுமையின் காரணமாக பெற்றோரால் விற்கப்பட்டதாகக் கூறப்படும் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுரேஷ் தாஸ், அவரது மனைவியும் இணைந்து குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தையை ₹ 7,000 க்கு விற்றதாக தசரத்பூர் பிளாக்கின் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ஒருவர்காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து இச்சம்பவம் வெளியில் தெரிய வந்துள்ளது.

இந்துக்கோவில் மீது கட்டப்பட்டதல்ல தாஜ்மகால் – இந்தியத் தொல்லியல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சம்பேபால் கிராமத்தில் இருந்த பெண் குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை

குழந்தையை விற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்குக் குழந்தையின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நபிகள் அவமதிக்கப்பட்ட விவகாரம்: நுபுர் ஷர்மாவுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கிய மேற்கு வங்க காவல்துறை

“நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்… எனவே, பிறந்த குழந்தையை எங்கள் உறவினர் ஒருவருக்குக் கொடுக்க முடிவு செய்தோம்,” என்று குழந்தையின் தந்தை சுரேஷ் தாஸ் கூறியுள்ளார்.

Source: ndtv

Udaipur சம்பவமும் BJP – RSS ன் சதி திட்டமும் | Vanchinathan | BJP Udaipur Tailor Kanhaiya Lal Video

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்