Aran Sei

‘கொரோனா தடுப்பூசிகளை வெளிச்சந்தையில் விற்க அனுமதி வேண்டும்’ – பிரதமருக்கு ஒடிசா முதலமைச்சர் கடிதம்

கொரோனா தடுப்பூசிகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாக் கடிதம் எழுதியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “தடுப்பூசிகளை வெளிச்சந்தையில் கிடைக்குமாறு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதன் மூலம் தடுப்பூசியைப் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ள விருப்பமுள்ள மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் மீது மாநில அரசுகள் கவனம் செலுத்த உதவும்.” என தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நம்பகமான முகமைகள் மற்றும் அரசாங்கங்களால் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் விநியோகத்தை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கலாம் என அவர் ஆலோசனை வழங்கியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி தட்டுபாடு ஏற்படாமல் இருக்க 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் – மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம்

இந்தியாவில் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி திறன் உள்ளது என்று கூறியுள்ள நவீன் பட்நாயக், “தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆதரவு அளிக்க வேண்டும். இது ஒரு அசாதாரண சூழ்நிலை என்பதால், அரசாங்கங்கள் இந்த விஷயத்தில் நீண்ட முயற்சிகளை எடுக்க வேண்டும்.”என தெரிவித்துள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

மேலும், கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் பெருநகரங்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிப்பதோடு, வயது வரம்பில் நெகிழ்வுத்தன்மை அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் கூறியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை தர வேண்டும்’ – பத்திரிகையாசிரியர்கள் சங்கம்

நாட்டின் பொருளாதாரத்திற்கு வளர்ச்சிக்கு இந்தப் பெரும் நகரங்கள் பங்கு வகிக்கிறது என்றும், இந்த நகரங்களில் பொது முடக்கம் ஏற்பட்டால் அது நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள தொழிலாளர்களின் போக்குவரத்தை பாதிக்கும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

”நாட்டில் மிகக்குறைந்த அளவில் தடுப்பூசி வீணாகும் ஒரு மாநிலமாக ஒடிசா உள்ளது. நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கு அதிகமான தடுப்பூசிகளைச் செலுத்தும் திறனை நாங்கள் பெற்றுள்ளோம். தடுப்பூசி செலுத்தி கொள்ள ஒடிசா மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கிறது” என நவின் பட்நாயக் கூறியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 11 கோடி பேருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி: இந்த அளவு கொரோனாவைத் தடுக்க உதவாதென ஆய்வில் தகவல்

தடுப்பூசிகள் வழங்கப்படுவதில் இருக்கும் சிக்கல், தேவையைப் பூர்த்தி செய்வதில் சிக்கலை உருவாக்குகிறது, “நாளொன்றுக்கு மூன்று லட்சம் தடுப்பூசிகளைச் செலுத்தும் எங்களுக்கு உதவுவதற்காக 25 லட்சம் தடுப்பூசியைக் கோரியிருந்தேன். முழுத்திறனுடன் செயல்பட்டால் கூட மாநிலத்தில் உள்ள 45 வயதுக்கு மேற்ப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த 160 நாட்களாகும்” என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்