Aran Sei

கொரோனா பணியில் 15 ஊடகவியலாளர்கள் மரணம்: ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தது ஒடிசா அரசு

டிசா மாநில ஊடகவியலாளர்களை முன்களப் கொரோனா பணியாளர்களாக அறிவித்து மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய முதல்வர் நவீன் பட்நாயக், “ஊடகவியலாளர்கள் தடையின்றி செய்திகளை வழங்குவதன் வழியாகவும், கொரோனா பரவல் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவதன் வழியாகவும், இம்மாநிலத்திற்கு ஒரு சிறந்த சேவையைச் செய்துக்கொண்டிருக்கிறார்கள். கொரோனாவிற்கு எதிரான நம்முடைய போரில், இவர்களின் பங்கு அளப்பரியது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஊடகவியலாளர்களை முன்களப் கொரோனா பணியாளர்களாக அறிவிக்கப்பட்டதன் வழியாக, மாநிலத்தில் 6944 ஊடகவியலாளர்கள் பயன் பெறுவர். கோபபந்து சம்பாதிகா ஸ்வஸ்திய பீமா யோஜனா திட்டத்தின் கீழ் அவர்கள் கொண்டு வரப்படுவர். அவர்களுக்கு ரூ .2 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.” என்று அவர் கூறியுள்ளார்.

உத்திரபிரதேசத்தில் 10 நாட்களில் 6 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு –  ஆக்சிஜன் கிடைத்தும் வெண்டிலேட்டர்கள் கிடைக்காததால் நேர்ந்த அவலம்

தவிர, கொரோனா கால பணியில் உயிரிழக்கும் ஊடகவியலாளர்களின் உறவினர்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுகிறது.

கொரோனாவின் இரண்டாவது அலையில், ஒடிசா மாநிலத்தில் இதுவரை 11 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். முதல் அலையின்போது, நான்கு ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர்.

அண்மையில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, தடுப்பூசி வழங்குவதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசை இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம் (இஜிஐ) வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்