Aran Sei

வெளிநாட்டு வாழ் இந்தியர் அட்டை – ‘தப்லிக்’ வேலைகளை செய்யக் கூடாது என நிபந்தனை – ஆர்டிஐ தகவல்

‘வெளிநாடு வாழ் இந்தியர் (Overseas Citizen of India)’ அங்கீகார அட்டையைப் பெறுவதற்கு, ‘தப்லிக்’ வேலைகளில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனை இருப்பதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது என, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த, சையத் லியாகத்துல்லா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ‘வெளிநாடு வாழ் இந்தியர்’ அட்டையைப் பெறுவது குறித்து கேட்ட கேள்விக்கு, இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்லிகி ஜமாத் மீதான வெறுப்பு அரசியல் – பாஜகவும் இனவாத ஊடகங்களும்

“தப்லிக் வேலைகளில் ஈடுபடக் கூடாது என உறுதி மொழி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தப்லிக் என்பதற்கு, நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்வது என்று அர்த்தம் என்றாலும், பெரும்பாலும் அது தப்லிக் ஜமாத்தையே குறிக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர் அட்டையை வைத்திருப்பவர்கள், அரசின் அனுமதியில்லாமல் (இந்தியாவில்) மதப் பிரச்சாரம், மலையேற்றம் மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனைகள் ஏற்கனவே இருந்தாலும், குறிப்பாக ‘தப்லிக்’ வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருப்பது ஏன்?” என்று சையத் லியாகத்துல்லா கேள்வி எழுப்பியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, பிரிட்டனின், பெர்மிங்ஹாமில் உள்ள இந்திய துணைத் தூதரகம், “இந்திய அரசின் கொள்கையின் படி, ‘வெளிநாட்டு வாழ் இந்தியர் அட்டை’ என்பது வாழ் நாள் முழுவதற்குமான (இந்திய) விசா. அதன் விதிகளின் படி தப்லிக் வேலைகளுக்கு அனுமதியில்லை. யாரேனும் தப்லிக் வேலைக்காக இந்தியா வர வேண்டுமென்றால், அதற்கான வகையில் விசா பெற்றுக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவிக்கிறது.

தப்லிகி ஜமாத் வழக்கு – சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிக்கும் கர்ப்பிணிப் பெண்

கடந்த ஆண்டின் தொடக்கத்தில், தப்லிக் ஜமாத் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் இந்தியா வந்திருந்தனர்.

கொரானா வைரஸ் இந்தியாவில் பரவிவந்த அந்தச் சமயம், விசா விதிமுறைகளை மீறியதாகவும், அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறியதாகவும், தப்லிக் ஜமாத்தினர் மீது குற்றம்சாட்டப்பட்டு, பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்