Aran Sei

தப்லிக் நடவடிக்கையில் ஈடுபட, ஓ.சி.ஐ அட்டைதாரர்களும் முன்அனுமதி பெற வேண்டும் – அரசாணை வெளியீடு 

ல்வி நிறுவனங்களில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ) ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களை மட்டுமே, ‘வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள்’ (ஓ.சி.ஐ) அட்டை வைத்திருப்பவர்கள் கோர முடியும் என, அரசாணை மூலம் மீண்டும் ஒரு முறை மத்திய உள்ளதுறை அமைச்சகம் வலியுறுத்தியிருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஓ.சி.ஐ அட்டைதாரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் நவம்பர் 15, 2019 ஆம் தேதி வழங்கிய வழிகாட்டுதலின் ஒரு பகுதி, இந்த அரசாணை மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களுக்குக் காவல்துறை சான்று பெறாவிட்டால் வேலை கிடையாது – ஜம்மு காஷ்மீர் அரசு

இந்திய அரசின் முன் அனுமதியின்றி, மத பிரச்சாரம், மலையேற்றம், ஊடகம் மற்றும் தப்லிக் (ஜமாத்) போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட, ஓ.சி.ஐ அட்டைதாரர்களுக்கு உரிமை இல்லை என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபடவும், ஆராய்ச்சி அல்லது பயிற்சிபடிப்பு மேற்கொள்ள விரும்பும் ஓ.சி.ஐ அட்டைதாரர்கள், அதற்கான அதிகாரி அல்லது வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

அகில இந்திய தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் இந்தியாவில் இருக்கும் எந்த கல்லூரி உள்ள பொதுப்பிரிவு இடங்களுக்களில் சேர்க்கை மேற்கொள்ளத் தகுதி இருக்கிறது என ஓசிஐ மாணவர்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர் என உள்துறை அமைச்சகம் கூறியிருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வருவதற்கான விசா வழங்குதல், இந்தியாவில் நீண்ட நாட்கள் தங்குதல், இந்தியர்களுக்கு இணையான கட்டண விகிதங்கள், இந்தியாவில் வேலை அல்லது வர்த்தகம் செய்தல், சொத்துக்கள் வாங்குதல் ஆகியவற்றில், ஏற்கனவே இருக்கும் நடைமுறை தொடரும் என மத்திய அரசு தெரிவித்திருப்பதக, தி இந்து கூறியுள்ளது.

மத்திய அரசு கல்வி நிறுவங்களில் ஓசிஐ அட்டைதாரர்களை நிரந்திர கல்வி பயிற்றுவிப்பாளர்களாக நியமிப்பது தொடர்பாக, 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு எடுத்த முடிவுவை புதிய அரசாணை பாதிக்காது என அதிகாரிகள் கூறியிருப்பதாக, தி  இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்