Aran Sei

‘ஆக்கிரமிப்பாளர்கள் மனிதர்களை வீழ்த்துகிறார்கள் ஆட்சியாளர்களோ விமானங்களையே வீழ்த்துகிறார்கள்’ – ஏர் இந்தியா விற்பனை குறித்து சு.வெங்கடேசன் விமர்சனம்

ர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமத்திற்கு ஒன்றிய அரசு விற்பது தொடர்பாக ஆக்கிரமிப்பாளர்கள் மனிதர்களை வீழ்த்துகிறார்கள் ஆட்சியாளர்களோ விமானங்களையே வீழ்த்துகிறார்கள் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்தும் திட்டத்தின் கீழ், அதிகப்படியான தொகைக்கு டாடா சன்ஸ் குழுமம் ஏலம் கேட்டதை அடுத்து, நிறுவனம் அவர்களுக்கு விற்கப்பட்ட இருக்கிறது.

‘இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே இதயமே’ – பிறைசூடனுக்கு அஞ்சலி

ஏர் இந்தியாவை டாடாவிற்கு விற்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அடங்கிய குழு இறுதி செய்ததாக முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் இயக்குநர் துஹின் குமார்  பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்த விற்பனை ஒப்பந்ததின்படி டாடா குழுமம் அளிக்கும் தொகையில் 15 விழுக்காடு இந்திய அரசுக்குச் செல்லும் என்றும், மீதமிருக்கும் தொகை ஏர் இந்தியாவின் கடனை அடைக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா?’- நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு சு.வெங்கடேசன் கடிதம்

”ஆகஸ்ட் 31, 2021 ஆம் தேதிவரை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் 61,560 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதில் ரூ. 15, 300 கோடியை டாடா செலுத்த வேண்டும். மீதமிருக்கும் தொகையில், ரூ. 46,262 கோடிக்கு அரசு பொறுப்பேற்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாட்டா குழுமத்திற்கு ஏர் இந்தியாவை விற்றது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “கடந்த மாதம் அமெரிக்க விமானத்திலிருந்து ஆப்கானியர் கைநழுவி கீழே விழுந்ததைப் போல இந்த மாதம் இந்தியர்களின் கைநழுவி ஏர்இந்தியா கீழே விழுந்துள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் மனிதர்களை வீழ்த்துகிறார்கள் ஆட்சியாளர்களோ விமானங்களையே வீழ்த்துகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்