Aran Sei

‘ஓபிசி இடஒதுக்கீட்டை அமல் படுத்தாத டெல்லி பல்கலைக்கழகம்’ – நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு தகவல்

டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆசிரியர் நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) உரிய இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுவதில்லை என்றும் அப்பல்கலைக்கழகம் சமூக நீதிக்கான தன்னுடைய அர்ப்பணிப்பில் தோல்வியடைந்து வருகிறது என்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் நலன் தொடர்பான குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அவ்வறிக்கையில், “சமூகத்தில் பின்தங்கிய மக்களின் அதிகாரத்தையும் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு நடவடிக்கைகளில் டெல்லி பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகம் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், டெல்லி பல்கலைக்கழகமானது அதன் ஆசிரியர் நியமனத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவில்லை. இதனால், சமூக நீதிக்கான தனது அர்ப்பணிப்பில் டெல்லி பல்கலைக்கழகம் தோல்வியுற்றதை கண்டு குழு வருந்துகிறது” என்று கூறியுள்ளது.

அனுமதிக்கப்பட்ட மைதானத்தில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் – தடுக்க முயன்ற வலதுசாரிகள் கைது

மேலும், டெல்லி பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட 1,706 ஆசிரியர் பணியிடங்களில் 75 ஆசிரியர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அக்குழு, “தற்போதைய 4.63 விழுக்காடு பிரதிநிதித்துவத்திற்கும் சட்டப்பூர்வமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய 27 விழுக்காட்டிற்கும் இடைப்பட்ட இடைவெளியை சரி செய்ய பல்கலைக்கழகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது” என்று கூறியுள்ளது.

கேரளத்தில் சிபிஎம் தலைவர் கொடூரக் கொலை – முன்னாள் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் 4 பேர் உட்பட ஐவர் கைது

“சில குறிப்பிட்ட பதவிகளை உதாரணமாக எடுத்துக்கொண்டு பார்த்தோமேயானால், நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பல்கலைக்கழகத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்கள் முறையே 174 மற்றும் 67 என உள்ளன. அவற்றுள் ஓர் இடம் கூட நிரப்பப்படவில்லை” என்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனது அறிக்கையில் இதர பிற்படுத்தப்பட்டோர் நலன் தொடர்பான குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Source: TheWire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்