Aran Sei

ஓபிசி தொகுப்பு இட ஒதுக்கீடு: ரோகிணி ஆணையத்திற்கு கால நீட்டிப்புக் கூடாது – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

த்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27% இட ஒதுக்கீட்டில், தொகுப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. ஆனால், இன்று வரை ஆணையத்தின் பரிந்துரை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் மிகவும் மேன்மையானது என்று தெரிவித்துள்ளார். ஆணையத்தின் அறிக்கையைத் தாக்கல் செய்வதில் காட்டப்படும் தாமதம் தான் மிகவும் வருத்தமளிப்பதாகக் கூறியுள்ள அவர், ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டின் தாக்கம்குறித்து ஆய்வு செய்வதுதான். 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையம் அடுத்த 3 மாதங்களில், அதாவது 2018-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதிக்குள் அதன் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகள், மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

‘மகாத்மாவின் ஆவியைக் குடித்தான் பேயன்’ – பேரறிஞர் அண்ணா

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில் எந்தெந்த சமுதாயங்கள் பயனடைந்தன என்பது குறித்து ஆய்வு செய்த ரோகிணி ஆணையம், விரிவான புள்ளி விவரங்களுடன் ஆய்வறிக்கை ஒன்றை 2018-ஆம் ஆண்டு மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மொத்தம் 2,633 சாதிகள் உள்ளன. இவற்றில் வெறும் 10 சாதிகள் மட்டுமே, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் 24.95 விழுக்காட்டை கைப்பற்றுகின்றன; மேலும் 38 சமுதாயங்கள் 25.04 விழுக்காட்டையும், 102 சமுதாயங்கள் இன்னொரு 25.03 விழுக்காட்டையும், 506 சமுதாயங்கள் 22.32 விழுக்காட்டையும் கைப்பற்றுகின்றன. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில் 97.34 விழுக்காட்டை 656 சாதிகள் கைப்பற்றிக் கொள்ளும் நிலையில் மீதமுள்ள 1977 சாதிகளுக்கு 2.66% மட்டுமே கிடைக்கின்றன. அந்த இட ஒதுக்கீட்டையும் கூட 994 சாதிகள் பகிர்ந்து கொள்ளும் நிலையில், 983 சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டில் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இவை அனைத்தையும் நீதிபதி ரோகிணி ஆணையம் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளது.

காசிப்பூரில் விவசாயிகள் போராட்டத்தை கலைத்த பாஜக – ஜாட் சமூகத்தின் கோபத்தை சீண்டியுள்ளதா?

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு ஒரு சில தரப்பினரால் மட்டுமே அனுபவிக்கப் படுவதை உறுதி செய்த ரோகிணி ஆணையம், அனைவருக்கும் சமூகநீதி கிடைப்பதற்கும் தீர்வை முன்வைத்துள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை 3 தொகுப்புகளாகப் பிரித்து இதுவரை இட ஒதுக்கீட்டை அனுபவிக்காத சாதிகளுக்கு 10%, ஓரளவு அனுபவித்த சாதிகளுக்கு 10%, அதிகமாக அனுபவித்த சமூகங்களுக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்பது தான் ரோகிணி ஆணையம் முன்வைத்துள்ள தீர்வு ஆகும்.

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி – நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையைத் திரும்பப் பெற்றது உச்சநீதிமன்ற கொலீஜியம்

இந்த 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகம் செய்யலாம் என்று ரோகிணி ஆணையம் முதலில் பரிந்துரைத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில், இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததால், இந்த இட ஒதுக்கீட்டால் இதுவரை பயன் பெறாத சமூகங்களுக்குச் சமூகநீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ள ராமதாஸ், “தாமதிக்கப்பட்ட நீதி எப்படி மறுக்கப்பட்ட நீதியோ, அதேபோல், தாமதிக்கப்படும் சமூகநீதியும் மறுக்கப்படும் சமூகநீதி தான்” என்று கூறியுள்ளார்.

“நீதிபதி ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டபோது, அதன் பதவிக்காலம் 3 மாதங்கள் மட்டும் தான். ஆனால், அதன் பதவிக்காலத்தை விட 13 மடங்கு காலம் கடந்து விட்டது. இன்று வரை மொத்தம் 9 முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு விட்டது. அதற்குப் பிறகும் நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிப்பது என்பது சுமார் 2000 சாதிகளுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகம்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கான இடஒதுக்கீடு மறுப்பு – அண்ணா பல்கலையில்., எம்.டெக் மாணவர் சேர்க்கை நிறுத்தம்

நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலத்தை இனியும் நீட்டிக்கக் கூடாது என்றும் ஆணையத்தின் பரிந்துரை அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுத்து அடுத்த சில நாட்களில் தாக்கல் செய்யும்படி நீதிபதி ரோகிணி ஆணையத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். ரோகிணி ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்