Aran Sei

ஓ.பி.சி க்களுக்கு சொந்தமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் – 39.4 விழுக்காட்டுடன் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்

ந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சொந்தமாகக் கிட்டத்தட்ட 30 விழுக்காடு சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்குச் சொந்தமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

உத்தரபிரதேசம்: மசூதியின் முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டிய சாமியார் – 11 நாட்களுக்குப் பிறகு கைது செய்த காவல்துறை

இந்தியாவில் உள்ள 80.16 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சொந்தமாக 23.31 லட்சம் நிறுவனங்கள் உள்ளன என்று சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டு அலுவலகத்தின் 2022 மார்ச் 31 தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்குச் சொந்தமான 41 விழுக்காடு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் உள்ளது. தமிழ்நாடு 14,5 விழுக்காட்டுடன் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 14.4 விழுக்காட்டுடன் இரண்டாம் இடத்திலும், ராஜஸ்தான் 12.4 விழுக்காட்டுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

சாமியார் ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை வழக்கு – பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு மிரட்டல் கடிதம்

இந்தியாவில் பொதுப்பிரிவினரில் உள்ளவர்களே 61.8 விழுக்காடு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வைத்துள்ளனர். பட்டியல் வகுப்பினருக்குச் சொந்தமாக 6.8 விழுக்காடு நிறுவனங்களும், பழங்குடியினருக்குச் சொந்தமாக 2.1% நிறுவனங்களும் உள்ளன.

1-5 கோடி ரூபாய் முதலீட்டுடன் இயங்கும் நிறுவனங்கள் குறு நிறுவனங்கள் என்றும், 5-19 கோடி ரூபாய் முதலீட்டுடன் இயங்கும் நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் என்றும், 10-250 கோடி ரூபாய் வரை முதலீட்டுடன் இயங்கும் நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்கள் என்று 2020 ஆம் ஆண்டு சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களின் ஒன்றிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா: பாஜக அமைச்சர் மீது ஊழல் குற்றம் சாட்டிய பாஜக உறுப்பினர் தற்கொலை – அமைச்சரைக் கைது செய்தால் தான் இறுதிச் சடங்கு நடத்துவோம் என பாதிக்கப்பட்ட குடும்பம் வேதனை

தமிழ்நாட்டில், மொத்தம் உள்ள சுமார் 8.56 லட்சம் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களில் 39.4 விழுக்காடு பிற்படுத்தபட்ட வகுப்பினருக்குச் சொந்தமானது. இந்தியச் சராசரியான 29 விழுக்காட்டை விட இது 10 விழுக்காடு அதிகம்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சொந்தமாக 3,37,016 சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இதில், 3,23,441 குறு நிறுவனங்களும், 12,778 சிறு நிறுவனங்களும், 797 நடுத்தர நிறுவனங்களும் அடக்கம்.

Source : The Hindu

அயோத்தியா மண்டபத்தை வைத்து அரசியல் செய்கிறது பாஜக… தோழர் மருதையன் விளாசல்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்