Aran Sei

இந்தியாவைப் பிளவுபடுத்தும் தேசியவாதம் – எச்சரிக்கும் ஒபாமா

Image Credits: NPR

மெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது புதிய புத்தகத்தில், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் புகழ்ந்துள்ளார். இந்தியாவின் எதிர்காலம், மதம் மற்றும் சாதி மோதல்களால் பாதிக்கப்படுவதைப் பற்றிய அவரது கவலையையும் பதிவிட்டுள்ளார்.

ஒபாமா இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டதன் அடிப்படையில் அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஒபாமாவின் ‘ஏ ப்ராமிஸ்டு லாண்ட் (A Promised Land) எனும் சுயசரிதை நூல் இரண்டு பாகங்களாக வரவுள்ளது. அதன் முதல் பாகம் இன்று உலகளவில் வெளியாகியுள்ளது. இதில், 2011-ம் ஆண்டு, ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைப் பற்றிய குறிப்புகளும் அடங்கியுள்ளன.

ஜி -20 உச்சிமாநாட்டில் மன்மோகன் சிங்கை முதன்முதலில் சந்தித்ததைப் பற்றி நினைவு கூறியுள்ளார். அவரோடு உரையாடிய அனுபவம் புதிதாக இருந்ததாவும் அந்நூலில் தெரிவித்துள்ளார்..

அதிக வயது வித்யாசம் இருந்தபோதிலும், மன்மோகன் சிங்குடன் தான் ஒரு நல்லுறவைக் கொண்டிருந்ததாக ஒபாமா கூறியுள்ளார்.

ஒபாமாவின் சுயசரிதை – மன்மோகன் சிங்குக்குப் புகழாரம்

“70 வயதை தாண்டிய, மென்மையான குணம் படைத்த ஒரு பொருளாதார நிபுணர். சீக்கிய நம்பிக்கையின் அடையாளங்களாக இருந்த தலைப்பாகையை அணிந்து வெள்ளை தாடியையும் கொண்டிருந்தார். ஆனால், மேற்கத்திய கண்ணுக்கு அவர் ஒரு புனிதனைப் போல் தோன்றினார். அவர் 1990 களில் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது, லட்சக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து உயர்த்தினார். மன்மோகன் ஒரு புத்திசாலியான, சிந்தனைமிக்க, நேர்மையான பிரதமராக இருந்தார்” என்று ஒபாமா விவரித்துள்ளார்.

இந்தப் புத்தகத்தில், இந்தியாவின் எதிர்காலத்தைக் குறித்த தனது அச்சத்தை அவர் பலஇடங்களில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில், இன-தேசியவாத சக்திகள் பலமடைந்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள ஒபாமா, அது தனது பதவி காலத்திலேயே தொடங்கிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியத் துணைக் கண்டம் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால் லட்ச கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்தப் பிரிவினையைத் தடுக்க முடியாத ‘ஏமாற்றத்தை’ மகாத்மா காந்தி எவ்வாறு கையாண்டார் என்று ஒபாமா ஆச்சிர்யமடைந்துள்ளார்.

“காந்தி முயற்சித்தபோதிலும், அவரால் இந்தியாவின் மோசமான சாதிய முறையை முறியடிக்க முடியவில்லை. அவர் தனது எழுபது வயதில் பேரணிகளை நடத்தி, உண்ணாவிரதம் இருந்து, பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். இருப்பினும், 1948-ம் ஆண்டு, தனது இறுதி நாள் அன்று பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் காந்தி ஒரு இளம் இந்து அடிப்படைவாதியால் கொல்லப்பட்டார். அந்த இந்து அடிப்படைவதியை பொறுத்தவரை ஒருமைப்பாடு என்பது மத நம்பிக்கைக்குத் துரோகமிழைக்கும் செயல்” என்று ஒபாமா தனது அச்சத்தை ஏ ப்ராமிஸ்டு லாண்ட் நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்