Aran Sei

வரதட்சணை முறை பற்றிய செவிலியர் பாடப்புத்தகம் – சந்தையிலிருந்து திரும்பப் பெற்ற புத்தக வெளியீட்டாளர்

ழகு குறைவான பெண்களுக்கு அதிக அளவு வரதட்சணை கொடுப்பதால் நல்ல மணமகனுடன் திருமணம் நடக்கிறது” என்று வரதட்சணையின் நன்மைகளை கூறும் செவிலியர்களுக்கான சமூகவியல் பாடப்புத்தகத்தைச் சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக புத்தக வெளியீட்டாளர் தெரிவித்துள்ளார்.

‘செவிலியர்களுக்கான சமூகவியல் பாடநூலின்’ உள்ளடக்கம் குறித்து அதன் வெளியீட்டாளரான ஜேபி பிரதர்ஸ் மெடிக்கல் பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

செவிலியர்களுக்கான பாடத்திட்டம்: “அழகு குறைவான பெண்ணின் திருமணத்திற்கு வரதட்சணை உதவுகிறது” – பகுதியை நீக்க சிவசேனா கோரிக்கை

அதில், “புத்தகத்தின் 122 ஆவது பக்கத்தில் வரதட்சணையின் நன்மைகள் பற்றிய பகுதிக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து இப்புத்தகத்தைச் சந்தையிலிருந்து உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேபி பிரதர்ஸ் மெடிக்கல் பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிடெட் வெளியீட்டகத்தைக் கடுமையாகச் சாடிய சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, வரதட்சணைக்கு எதிரான சட்டங்கள் இந்தியாவில் இருந்தாலும், இதுபோன்ற பிற்போக்கு மனநிலையும் இங்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்