Aran Sei

மம்தாவிற்கு எண்ணற்ற காயங்கள்: மக்களின் சக்தியை பாஜக பார்க்கும் – திரிணாமுல் எம்.பி.கருத்து

மேற்குவங்க மாநிலம், நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது மர்ம நபர்களால் தாக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு தோள்பட்டை, கழுத்து உள்ளிட்ட எண்ணற்ற இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

நந்திகிராமில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற மம்தா பானர்ஜி நேற்றைய தினம் அடையாளம் தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்டார்.

மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பேசிய யோகி ஆதித்யநாத் – திரிணாமூல் கண்டனம்

இதைத்தொடர்ந்து அம்மாநில எஸ்எஸ்கேஎம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மம்தா பானர்ஜிக்கு நடந்த முதல்கட்ட மருத்துவ ஆய்வில் தோள் பட்டை, கழுத்து, கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 48 மணிநேர மருத்துவக்கண்காணிப்பில் மம்தா பானர்ஜி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதைப் பொறுத்தே அடுத்தக் கட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விவசாய சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்’ – சிறப்புக் கூட்டத்தைக் கூட்டும் மேற்குவங்க முதல்வர்

மம்தா தாக்கப்பட்ட விவகாரம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர்  தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

மம்தா தாக்கப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா, வன்மையான கண்டனங்களையும் தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், மம்தா தாக்கப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமுல் எம்.பி அபிஷேக் பானர்ஜி, மே 2 அன்று தேர்தல் முடிவின்போது மக்களின் சக்தியைப் பாஜக காணும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்