Aran Sei

2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை இரு மடங்காகியது – தனியார் நிறுவன ஆய்வில் தகவல்

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் நடுத்தர வர்கத்தினர் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. மேலும், ஏழைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என வாசிங்டனை மையமாக கொண்ட  இயங்கும் லாபநோக்கமற்ற பியூ ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வீழ்ச்சியின் காரணமாக, இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை 3.2 கோடியாக குறைந்திருப்பதாகவும், இது 750 ரூபாய் மற்றும் 1500 ரூபாய் தினசரி வருமானம் கொண்ட நடுத்தர வர்க்கத்தினரின் உலக அளவிலான வீழ்ச்சியில் 60 விழுக்காடாகும் எனவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு இந்தியாவில் நடுத்தர வர்கத்தினரின் எண்ணிக்கையில் 9.9 கோடியாக இருந்தது. பெருந்தொற்றுக்கு பிறகு 6.6 கோடியாக குறைந்திருக்கிறது என பியூ அமைப்பு கணக்கிட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் புகாரில் சிக்கிய துறைத்தலைவர்: கண்டுகொள்ளாத பல்கலைக்கழகம் -மாணவர்கள் போராட்டம்

ரூபாய் 145க்கு  குறைவாக தினசரி வருமானம் கொண்ட  ஏழை வர்கத்தினரின் எண்ணிக்கை 7.5  கோடியாக அதிகரித்திருப்பதாகவும், இதுவும் உலக அளவில் அதிகரித்த ஏழைகளின் எண்ணிக்கையில் 60 விழுக்காடாக இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தி டெலிகிராப் கூறியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டும் வேலைக்கான தேவை அது தொடங்கப்பட்ட காலத்தை விட தற்போது அதிகரித்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வீழ்ச்சியின் விளிம்பில் விவசாய சமூகம்’: விலை உயர்வுக்கு எதிராக பாகிஸ்தான் விவசாயிகள் டிராக்டர் பேரணி

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 13.4 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது கொரோனாவிற்கு முந்தயை காலத்திற்கு மதிப்பிடப்பட்ட 5.9 கோடியில் இரு மடங்கைவிட அதிகமாகும் என பியூ தெரிவித்திருப்பதாக, தி டெலிகிராப் கூறியுள்ளது.

இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்பதால், இரு நாடுகளையும் ஒன்றாக ஆய்வு செய்ததாகவும், இந்தியா பொருளாதாரத்தில், “பெரிய அளவில்” சரிந்திருக்கும் அதே  வேளையில், சீனாவால் ”சரிவில் சிறிதளவு” சீர் செய்ய முடிந்திருக்கிறது என பியூ ஆய்வு நிறுவனம் கண்டறிநந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை நிலைநாட்ட தவறினால்? – அண்ணல் அம்பேத்கர் மகத் குள போராட்ட உரை

கொரோனாவிற்கு முன்பு, 2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு  உற்பத்தியில்  இந்தியா 5.8 விழுக்காடும், சீனா 5.9 விழுக்காடு கிட்டத்தட்ட ஒரே அளிவிலான வளர்ச்சியடையும் என உலக வங்கி கணித்திருந்த நிலையில்,  இது, கொரானாவிற்கு பின், இந்தியாவில், மைனஸ் 9.6 விழுக்காடாகவும், சீனாவில் 2 விழுக்காடாகவும் இருக்கிறது என பியூ நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாக தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்