Aran Sei

2020இல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,579 – ஒன்றிய அமைச்சர் தகவல்

2020 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,579 ஆக உள்ளது என்று ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று(நவம்பர் 30), மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள நரேந்திர சிங் தோமர், “ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், விவசாயிகள் தற்கொலைக்கான முதன்மையான காரணங்கள் எதையும் தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

“ஆனாலும், தற்கொலைக்கான காரணங்கள் என குடும்பப் பிரச்சனைகள், நோய், போதைப்பொருள்களுக்கு அடிமையாதல், திருமணம் தொடர்பான பிரச்சனைகள், காதல் விவகாரங்கள், வங்கி கடன், வேலையின்மை, தொழிற்சார் பிரச்சினை மற்றும் சொத்து தகராறு போன்றவற்றை அக்காப்பகத்தின் பட்டியலிட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டில் நடந்த மொத்த விவசாயிகள் தற்கொலைகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2,567 பேரும், கர்நாடகாவில் 1,072 பேரும், ஆந்திரப் பிரதேசத்தில் 564 பேரும், தெலங்கானாவில் 466 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 235 பேரும் மற்றும் சத்தீஸ்கரில் 227 பேரும் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது என மக்களவையில் சமர்பிக்கப்பட்டுள்ள தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின் வழியாக தெரியவந்துள்ளது.

மேலும், உத்தரப் பிரதேசத்தில் 87 விவசாயிகளும், தமிழ்நாட்டில் 79 விவசாயிகளும், கேரளாவில் 57 விவசாயிகளும் 2020 ஆம் ஆண்டு இறந்துள்ளதாக அவ்வறிக்கை தகவல் அளித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்