Aran Sei

பெகசிஸ் ஸ்பைவேர்: கண்காணிக்கப்பட்டார்களா தமிழ் தேசியர்கள், பெரியாரிய செயற்பாட்டாளர்கள்?

மிழ் தேசியவாதிகள் மற்றும் பல பெரியாரிய செயற்பாட்டாளர்களின் தொலைபேசி எண்கள் பெகசிஸ் ஸ்பைவேர் வழியாக உளவு  பார்க்கப்பட்டிருக்கலாம்  என்று   தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த கே.ராமகிருஷ்ணன் மற்றும் திராவிடர் கழகத்தின் பொருளாளர் குமரேசன் ஆகியோரின் தொலைபேசி எண்ககள்  பெகசிஸ் ஸ்பைவேர் வழியாக உளவு  பார்க்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் பட்டியலில்  இடம்பெற்றுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

பெகசிஸ் ஸ்பைவேர்: ‘உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும்’ – மூத்தப் பத்திரிகையாளர் என்.ராம் பொதுநல மனு

மேலும், இந்தத் தொலைபேசி எண்களைத் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்,  அந்த எண்கள் கண்காணிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்த இயலாது என்று  தி வயர் செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெகசிஸ் ஸ்பைவேர்: தேச பாதுகப்பில் நிகழ்ந்த வன்முறை

பெகசிஸ் ஸ்பைவேர் வழியாக உளவு  பார்க்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்து தெரிவித்துள்ள திருமுருகன் காந்தி, “இந்துத்துவத்திற்கு எதிராக குரல் எழுப்பக் கூடியவர்களை அடக்க நினைப்பதே  அவர்களின்  சிந்தனை. ஜனநாயக ரீதியாகச் செயல்ப்படக்கூடியவர்கள் மீதான திட்டமிட்ட, ஜனநாயகத் தன்மையற்றத் தாக்குதல் இது” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெகசிஸ் ஸ்பைவேர் நிறுவனத்திற்கு பணம் கொடுத்தது யார்? சொல்லுங்கள் மோடி? – சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

இதுகுறித்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைபாளர் சீமான், “நான்  கண்காணிக்கப்படுகிறேன்  என்று  எனக்குத் தெரியும். ஏனென்றால், தமிழிழ விடுதலைப் புலிகளை  நான் மீண்டும் கட்டமைக்கக்கூடும் என்று அரசு நம்புகிறது. நான் கண்காணிக்கப்படும் விவகாரம்  குறித்து   மிகுந்த விழிப்புணர்வோடு உள்ளேன். இதைப் பொருட்படுத்தாமல் நாங்கள் தொடர்ந்து உழைப்போம். ஆனால், இது மிகுந்த  ஜனநாயகத்தன்மை அற்றது, பாசிசமானது” என்று  குறிப்பிட்டுள்ளதாகவும் தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மோடி அரசை விரட்டும் ‘பெகாசிஸ்’ என்னும் பிசாசு – அ.மார்க்ஸ்

இதைப்போலவே   கே.ராமகிருஷ்ணன், திராவிடர் கழகத்தின் பொருளாளர் குமரேசன் ஆகியோரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்