பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் மீதான சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக இணைய வழியில் புகார் அளிக்கும் வகையில் தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் இணையதளத்தை துவக்கியுள்ளது.
நேற்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவைச் சிறப்பிக்கும் வகையில் இந்த இணைய தளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழிற்நுட்ப துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள சமூக நீதித்துறை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா, இந்த இணையதளத்தின் வழியே இனி எளிதாகப் புகார் அளிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இணையதளம் குறித்து கூறிய தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையத்தின் தலைவர் விஜய் சம்பாலா, ncsc.negd.in என்ற இணையதள முகவரி வாயிலாக புகார் அளிக்கலாம் எனவும், அதே போன்று புகார் எந்த நிலையில் உள்ளதென அறியலாம் என்றும் கூறியுள்ளார்.
“சேரிகளின் குடியரசுத் தலைவர்” – உகாண்டா அரசியலை உலுக்கிய பாபி வைன்
மேலும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் தொலைப்பேசிகளின் செயலிகள் வழியாக புகார் அளிக்கும் வசதி இன்னும் இரண்டு வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையத்தின் தலைவர் விஜய் சம்பாலா தெரிவித்துள்ளார்.
source ; the hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.