Aran Sei

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்தேசிவிர் கடத்தல் – தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிந்த உத்திரபிரதேச காவல்துறை.

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்தேசிவிர் மருந்தைக் கடத்தி கள்ளச்சந்தையில் விற்க முயன்றதாக, குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் 3 பேர்மீது  தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் வழக்கு பதியப்பட இருப்பதாக உத்திரபிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரெம்தேசிவிர்கான தேவை அதிகரித்ததை அடுத்து குஜராத்தில் இருந்து 25 ஆயிரம் மருந்து பாட்டிலகளை உத்திரபிரதேச அரசு இறுக்குமதி செய்த அடுத்த இரு தினங்களில் இந்தக் கைது நடைபெற்று இருக்கிறது.

கைது செய்யப்பட்டிருக்கும் மூவரிடம் இருந்தும், 265 ரெம்தேசிவிர் குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக உத்திரபிரதேச அதிரடிப் படை (எஸ்டிஎஃப்) தெரிவித்துள்ளது.

கொரோனாவை தடுக்க ரெம்தேசிவிர் மருந்தின் தேவை அதிகரிப்பு – ஏற்றுமதியை தடை செய்த மத்திய அரசு

ரெம்தேசிவிர்கான தேவை அதிகரித்திருப்பதால், உள்ளுர் மருந்து விற்பனையாளர்கள், மருந்துகளைக் கடத்தி கள்ளச் சந்தையில் விற்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக எஸ்டிஎஃப் குறிப்பிட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு குப்பிகளின் மதிப்பு 5,400 ரூபாய் மதிப்பிருக்கும் என்றும், மருந்தின் பேட்ச் எண் உள்ளிட்ட எந்த விவரங்களும் அந்தக் குப்பிகளில் குறிப்பிடப்படவில்லை என எஸ்டிஎஃப் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: பாஜக தலைவருக்கு எப்படி கிடைத்தது 5000 தடுப்பூசிகள்? – காங்கிரஸ் கேள்வி

”இது மனித குலத்திற்கு எதிரான குற்றம்” என்பதால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பதியப்படும் என்றும், மருந்தைக் கள்ளச்சந்தையில் வர்த்தகம் செய்யும் அனைவரையும் அடையாளம் காண காவல்துறை முயன்று வருவதாக கான்பூர் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் மோகன் சினி, பிரசாந்த் சுக்லா, சச்சின் குமார் ஆகிய மூவரில், மோகன் சினி, பிரசாந்த் சுக்லா இருவரும் மருத்துவ பிரதிநிதிகள் என எஸ்டிஎஃப் தெரிவித்துள்ளது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்