Aran Sei

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் – தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கூலி உயர்த்திய மத்திய அரசு

காத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின்  ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மேகாலயாவில் 23 ரூபாய் அதிகரிப்பட்டு ஒரு நாள் ஊதியம் ரூ. 256 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தலா 17 ரூபாயும், கோவா மற்றும் கர்நாடகாவிற்கு 14 ரூபாயும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்புவது நல்ல சமூகத்தை உருவாக்கும் – போலி செய்திக்கு பாடகி பதிலடி

நாட்டிலேயே குறைந்த பட்சமாக ராஜஸ்தானில் ஒரு ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், உத்திரகண்ட் ஆகிய மாநிலங்களில் ரூ.3 உயர்வு நிர்ணயிக்கபட்டுள்ளது.

மொத்தமுள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 10 ரூபாய்க்கு குறைவாகவும், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 10 ரூபாய்க்கு அதிகமாகவும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாங்கள் மதவாத கட்சியா? – பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ஐ.எஸ்.எஃப்

இந்த ஊதிய உயர்வு அறிவிப்பில் கேரளா மற்றும் லக்சதீப் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு பகுதிகளும் ஒரு ரூபாய் கூட ஊதிய உயர்வு வழங்கப்பட்டவில்லை.

உயர்த்தப்பட்ட ஊதியங்கள் அனைத்தும் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. கொரானா பெருந்தொற்று காரணமாகப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் பயணுள்ளதாக இந்தத் திட்டம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்