Aran Sei

2௦19 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடுதான் இறுதிசெய்யப்பட்டது – அயல்நாட்டினர் தீர்ப்பாயம் அறிவிப்பு

டந்த ஆகஸ்ட் 31, 2௦19 அன்று வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு “இறுதிசெய்யப்பட்ட தேசிய குடிமைப் பதிவேடு” என்று அசாமில் உள்ள வெளிநாட்டினர் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

ஆனால்,  அசாம் தேசிய குடிமைப் பதிவேட்டைச் சட்டப்பூர்வ ஆவணமாக  உருவாக்கி  இந்திய பதிவாளர் ஜெனரல் அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய குடிமைப் பதிவேட்டில் இடம்பெற்ற  ஜமிரளா கிராமத்தைச் சேர்ந்த பிக்ரம் சிங்க்ஹா என்பவருக்கு எதிரான  ‘டி வாக்காளர்'[சந்தேகத்திற்கிடமான வாக்காளர்]  வழக்கு குறித்து தெரிவித்த வெளிநாட்டினர் தீர்ப்பாயம்- II ன் உறுப்பினர் சிஷிர் தே, ” கடந்த 2௦19 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமைப் பதிவேடு என்பது சந்தேகத்திற்கிடமின்றி ஒன்றுமேயில்லை. ஆனாலும் அதுவே இறுதிசெய்யப்பட்ட என்.ஆர்.சி”  என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட்  2௦௦8 ஆம் ஆண்டு  அசாம் எல்லைப் பாதுகாப்புப் படை   சட்டவிரோத குடியேறிகள் சட்டம்,1999 ன் கீழ்  பிக்ரம் சிங்க்ஹா மீது வழக்குப் பதிந்திருந்தது.

மேலும், பிக்ரம் தனது இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க எண்ணற்ற ஆவணங்களையும் சமர்பித்தார். அதில், அவரது தாத்தாவின் பெயரில் 1968 ஆம் ஆண்டு  பதியப்பட்ட நில ஆவணம் மற்றும் அவரது தந்தை 1972 ஆம் ஆண்டிலிருந்து  விமானப்படையில் பணிபுரிந்த ஆவணங்கள் ஆகியவையாகும்.

கடந்த செப்டம்பர் 1 அன்று வெளிநாட்டினர் தீர்ப்பாயம்- II ன் உறுப்பினர் சிஷிர் தே இந்த  வழக்கை விசாரித்தபோது ஆஜரான அரசுத்தரப்பு வழக்கறிஞர், 1966 ஆம் ஆண்டுக்கு முன்னதாகப் பிக்ரமின் குடும்பம் அசாமில் வசித்ததற்கான சான்றாவணம் எதையும் சமர்பிக்கவில்லை என்றும்  கூறியிருந்தார்.

இந்நிலையில், பிக்ரம் சிங்க்ஹா வெளிநாட்டினர் இல்லை, இந்திய குடிமகன் தான் என்று சிஷிர் தே  உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய குடிமைப் பதிவேடு பணியானது முடிவடைந்து  கடந்த ஆகஸ்ட் 31, 2௦19 அன்று வெளியிடப்பட்டது. அதில்,  3.11 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்ற நிலையில், ஏறத்தாழ 19 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டிருந்தது.

Source:THE HINDU 

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்