Aran Sei

‘தேசத் துரோக’ சட்டத்தை அகற்ற இதுவே நேரம் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நரிமன்

ரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்வது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹின்டன் நாரிமன் கவலை தெரிவித்துள்ளார். மேலும், தேசத் துரோகச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தேச துரோகச் சட்டங்களை முற்றிலுமாக அகற்றி, யாரையும் வன்முறைக்கு தூண்டாத வரையில் சுதந்திரமான பேச்சுரிமையை அனுமதிக்க வேண்டிய நேரம் இது,” என்று அவர் கூறியுள்ளார்.

ஜனவரி 14 அன்று மும்பையில் உள்ள டிஎம் ஹரிஷ் சட்டப் பள்ளியின் தொடக்க விழாவில் உரையாற்றிய நீதிபதி நாரிமன், கருத்துரிமையோடு பேசுபவர்கள் மீது தேச துரோகச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், வெறுப்புப் பேச்சுகளை பேசுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் வெறுப்புப் பேச்சுகளை பேசுபவர்கள் எல்லா குழுக்களிலும் உள்ளனர். இந்நபர்களை கட்டுபடுத்துவதற்கு அதிகாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள்.

கெடுவாய்ப்பாக, ஆளும் கட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் வெறுப்புப் பேச்சை கண்டிக்காமல் மௌனமாக இருப்பது மட்டுமின்றி, ஏறத்தாழ அதை ஆமோதிக்கவும் செய்கின்றனர் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹின்டன் நாரிமன் தெரிவித்துள்ளார்.

Source: the indian express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்