Aran Sei

குஜராத் சட்டமன்ற நடவடிக்கைகள் – இணையத்தில் வெளியிட வழக்கு – உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Image Credits: DNA India

ட்டசபையின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை இணையத்தில் வழங்க வேண்டும் என்று கூறி குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (பில்) ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாகப் பதிலளிக்க  குஜராத் உயர் நீதிமன்றம் சட்டமன்றத்தின் செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் செயலகம் தகவல்களை “உடனடியாக” வழங்கவில்லை என்று நீதா ஹார்டிகர் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் ஐ.ஜே.வோரா அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, நீதிபதிகள் சட்டமன்றத்தின் செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஒரு பெண் தனது விருப்பத்தோடு எடுத்த முடிவில் யாரும் தலையிட முடியாது – கல்கத்தா உயர் நீதிமன்றம்

பிப்ரவரி 17 க்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கோரியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4 வது பிரிவுக்கு இணங்க நீதிமன்றம் அதை வழிநடத்த வேண்டும் என்றும், அவையின் நடவடிக்கைகள் மற்றும் பிற விவரங்களை சட்டமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு 4, அனைத்து பொது அதிகாரிகளும் தங்கள் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை பொதுவில் பதிவிட வேண்டும் என்று கூறுகிறது.

பாஜக நிர்வாகிகள் மீதான வழக்குகளை திரும்ப பெறும் முடிவு – கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

நேரடி ஒளிபரப்பு செய்வதுடன், பழைய காட்சிகளை பகிர்வது, பூஜ்ஜிய நேரம், கேள்விகளின் பட்டியல், அவற்றின் பதில்கள் மற்றும் விவாதங்களின் உரை ஆகியவற்றை செயலகம் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட, நிறைவேற்றப்பட்ட, நிலுவையில் உள்ள, திரும்பப் பெறப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட சட்டங்கள், குழுக்கள் பற்றிய தகவல்கள் மற்றும் விதிகள் போன்றவற்றைப் பதிவேற்றவும் அது கோரியுள்ளது.

‘லவ் ஜிகாத் வழக்கு : நிரூபிக்க ஆதாரம் இல்லை’ – அலகாபாத் உயர் நீதிமன்றம்

கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், கோவா, கேரளா, பீகார், டெல்லி மற்றும் ராஜஸ்தான் சட்டமன்றங்கள் அதன் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இணையத்தில் பதிவு செய்வதாகப் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு நிலுவையில் இருக்கும்போது, கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் சட்டமன்றத்தின் வரவிருக்கும் அமர்வின் நடவடிக்கைகள் ஒளிபரப்பப்படுவதற்கும் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்