ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலையைக் கொண்டுவர தடியைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 21 அன்று, டெல்லியில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய ஆளுநர் , “ஆகஸ்ட் 5 அன்று ஒரு ஊரடங்கு நடக்கும் என்று மக்கள் என்னிடம் சொன்னார்கள், ஆனால், ஆகஸ்ட் 5 அன்று ஏதேனும் முக்கியமான நாளா என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் கடவுளின் அருளால், எந்த ஊரடங்கும் நடைபெறவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் , “ஊரடங்கு நடைபெறக் கூடாது என்பதற்காக நான் தடியைப் பயன்படுத்தினேன் என அந்த நாளின் முடிவில் ஒரு பத்திரிக்கையாளர் என்னிடம் கூறினார். ஆனால், அனைத்து போக்குவரத்தும் இயங்குகிறது , அதிக அளவில் மக்கள் வணிகம் செய்கிறார்கள் என்று நான் அவருடன் வாதிட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கொண்டு இதுகுறித்து கூறிய சின்ஹா, “இவையெல்லாம் தடியினால் நடைபெறவில்லை. ஒருவேளை அதனால் தான் நடந்தது என்று நீங்கள் நினைத்தால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, பாகிஸ்தான் மற்றும் ஆயுதம் தாங்கிய வன்முறையாளர்களால் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்போது, நான் ஊரடங்கைக் கட்டுபடுத்த தடியைப் பயன்படுத்துவதில் எவ்வித தவறுமில்லை” என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, “இது முதற்கட்ட நடவடிக்கை தான் என்பதில் நான் தெள்ளத்தெளிவாக இருக்கிறேன். இதை மீற யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். நான் பொறுப்பில் இருக்கும் வரை இதுதான் நிலைப்பாடு, இதில் சமரசமே இல்லை” என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
source: தி வயர்
தொடர்புடைய பதிவுகள்:
ஒரு பேரரசு உருவாக துணையிருந்த உலகளாவிய அபின் மற்றும் போதைப் பொருள் கடத்தல் – தாமஸ் மனுவேல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.