Aran Sei

திமுக தலைவர் மகள் வீட்டில் வருமானவரி சோதனை – கைப்பற்றிய பணத்தை திரும்ப அளித்த அதிகாரிகள்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை – மருமகன் சபரீசன், அண்ணா நகர் திமுக வேட்பாளரின் மகன் கார்த்திக் மோகன், கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் சொந்தமான இடங்களில் நேற்று (ஏப்ரல் 2) வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் வருமான வரித்துறை திமுகவினர் வீடுகளில் சோதனை  நடத்துவது கண்டிக்கத்தக்கது என பல எதிர்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் நீலாங்கரை வீட்டில் நடைபெற்ற சோதனையில் எந்த ஆவணமும், பணமும் கைப்பற்றப்படவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வீட்டு செலவிற்காக வைக்கப்பட்டிருந்த ரூ 1.36 லட்சம் கைப்பற்றப்பட்டு பின்னர் அது திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருமான வரித்துறை வழங்கிய ரசீது வெளியாகியுள்ளது.

“இந்தத் தேர்தல் தமிழ் மக்களுக்கும் பாசிச சக்திகளுக்கும் இடையில் நடக்கும் யுத்தம் – ஸ்டாலின்

முன்னதாக, வருமானவரித்துறை வெளியிட்டிருந்த  அறிக்கையில், “ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம், சூரிய மின்சக்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில், சோதனை நடைபெற்றது. தேர்தலுக்கான பணப்பட்டுவாடாவை இவர்கள் செய்வதாகவும் புகார்கள் வந்தன, அதனடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது” என்று கூறப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்