Aran Sei

உலோக லத்திகளைப் பயன்படுத்த உத்தரவிடப்படவில்லை – புகைப்படம் வைரலானதால் டெல்லி காவல்துறை விளக்கம்

லோக லத்திகளுடன் காவல்துறையினர் இருக்கும் புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து, உலோக லத்திகளை பயன்படுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், புகைப்படத்தில் இருப்பவர்களிடம் விளக்கம் கேட்டப்பட்டு இருக்கிறது என டெல்லி காவல்துறை தெரிவித்து இருப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு டெல்லியின் ஷஹ்தாரா பகுதியைச் சேர்ந்த  காவல்துறையினரின் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தப் புகைப்படத்தில் இருப்பதாகவும், அவர்கள் தங்களாக முன்முயற்சி எடுத்ததாகவும், புகைப்படத்தில் இருப்பவர்களிடம் இதற்கு விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை

”ஷஹ்தாரா பகுதியிலிருந்து அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் அனுமதி இல்லாமல், அந்தப் பகுதி அதிகாரி பெற்றார்” என டெல்லி காவல்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தாக என்டிடிவி  செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவின் பெயரில், அந்த லத்திகள் திரும்பப் பெறப்பட்டு இருக்கிறது. உலோக லத்திகளை பயன்படுத்தும் எந்த ஒரு எண்ணமும் இல்லை” என அந்த அதிகாரி தெரிவித்தாக என்டிடிவி கூறியுள்ளது.

இட ஒதுக்கீடு மறுப்பு: ’அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்தது ஏன்?’ – உச்ச நீதிமன்றம் கேள்வி

நேற்று வெளியான புகைப்படத்தில் ஒரு கையில் உலோக லத்திகளை வைத்திருந்த காவல்துறையினர், மற்றொரு கையின்  முன்பகுதியை தடுப்பதற்காக உலோக கவசத்தை அணிந்திருந்தனர் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புகைப்படைங்களை காவல்துறை வெளியிட்ட சில மணிநேரங்களில், உலோக லத்திகளை பயன்படுத்த எந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லையென டெல்லி காவல்துறை விளக்கம் அளித்திருப்பதாக என்டிடிவி கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்