Aran Sei

ஜார்கண்ட்டில் நீதிபதி கொல்லப்பட்டதாக வழக்கு – சி.பி.ஐ மண்டல இயக்குனர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜார்கண்ட் மாநிலத்தில் வாகனம் மோதி தணாபாத் மாவட்ட கூடுதல் நீதிபதி கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறை மேற்கொண்டு வரும் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்று அம்மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 28 அன்று, தணாபாத் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது  டெம்போ வாகம் மோதி கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் மீதான அடுத்த விசாரணையின்போது சி.பி.ஐயின் மண்டல இயக்குனர் ஆஜராக வேண்டுமெனவும் உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி ரஞ்சன்,  நீதிபதி சுஜீத் நாராயண் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய புலனாய்வுத் துறை தாக்கல் செய்துள்ள விசாரணையின் நிலைகுறித்த அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மாநில தடயவியல் ஆய்வகத்தில் உள்ள காலிப்பணி இடங்களை மூன்று மாதத்திற்குள் நிரப்ப வேண்டுமெனவும், இந்த வழக்கின் ஆவணங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் கசிந்துவிடாமல் இருக்க வேண்டுமெனவும் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

Source: The indian express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்