Aran Sei

மும்பை ஐஐடியில் பழங்குடியின மாணவர்களுக்கான ஒரு இடம் கூட நிரப்பப்படவில்லை – ஆர்டிஐ தகவல்

மும்பை ஐஐடியில் 2015 முதல் 2019 வரையிலான முனைவர் பட்ட படிப்பு சேர்க்கையில், பழங்குடியின மாணவர்களுக்கான ஒரு இடம் கூட நிரப்படவில்லை, என ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்திருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஐடி மும்பையில் செயல்பட்டுவரும் மாணவர் அமைப்பான, அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டம் பெற்ற தகவல்களில், மும்பை  ஐஐடியில் இருக்கும் மொத்தம் இருக்கும் 26 துறைகளில் 25 துறைகள் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  பட்டியலின வகுப்பு மாணவர்களுக்கான இடங்களை முறையாக நிரப்பவில்லை, அதேபோல 11 துறைகளில்  ஒரு பழங்குடியின் மாணவருக்கான இடம் கூட நிரப்பவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 முதல் 2019 வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மாணவர்கள் சேர்க்கைகளில், 71.6 விழுக்காடு இடங்கள் வரலாற்று ரீதியாக முன்னுரிமை பெற்ற பொதுப்பிரிவினருக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு முறையே 192.%, 7.5%, 1.6% இடங்கள் வழங்கப்பட்டு இருப்பதாக அதில் குறிப்பிப்பட்டுள்ளது.

நீங்கள் கார்ப்பரேட்டாக இருந்தால் நீதிமன்றம் செல்லலாம் – சாமானியர் நீதிமன்றம் சென்றால் வருத்தம் தான் அடைவர் – முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்

இதன் மூலம் இத ரபிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு, பட்டியல் வகுப்பினருக்கு 15 விழுக்காடு, பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடு இடங்கள் வழங்கப்பட வேண்டும் என இட ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்ட அளவு இடங்களை நிரப்ப உரிய துறைகள் தவறியிருப்பதாக தி இந்து தெரிவித்துள்ளது.

13 துறைகளின் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை விகிதம் 76 விழுக்காட்டிற்கு மேலாக இருப்பதாகவும், ஒவ்வொரு 100 விண்ணப்பங்களில், தேர்வான மாணவர்கள் எண்ணிக்கையைக் குறிக்கும் சேர்க்கை விகிதம், வரலாற்று ரீதியாக முன்னுரிமை பெற்ற வகுப்பைச் சேர்ந்த (பொது பிரிவு)  மாணவர்களுக்கு 3.8 விழுக்காடாகவும், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பிற்கு முறையே 3.1%,  2.5% மற்றும் 3.1% ஆக உள்ளதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 துறைகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை விகிதங்கள், பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை விகிதத்தில் பாதி அல்லது அதற்குக் குறைவாகவே இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஏழை மக்களே பெரும்பாலும் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்’ – உலக வங்கி அறிக்கை

உதாரணமாக, விண்ணப்பிக்கும் பழங்குடியினர் வகுப்பு மாணவர்களில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிகல் (இ.இ) மற்றும் மெக்கானிகல் (எம்.இ) துறைகளுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், விண்ணப்பித்த 148 பழங்குடியின வகுப்பு மாணவர்களில் இருவருக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்பட்டு சேர்க்கை விகிதம் 1.4 விழுக்காடாக இருக்கும் நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்காக சேர்க்கை விகிதம் 3.8 விழுக்காடாக இருப்பதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல எம்.இ துறையில் ஒரு பழங்குடியின வகுப்பு மாணவருக்குக் கூட சேர்க்கை வழங்கப்பாடாத நிலையில், விண்ணப்பித்த 4,590 பொதுப்பிரிவு மாணவர்களில் 168 மாணவர்களுக்குச் சேர்க்கை வழங்கப்பட்டு சேர்க்கை விகதம் 3.7 விழுக்காடாக இருப்பதாக தி இந்து கூறியுள்ளது.

எனர்ஜி சயின்ஸ் துறையில் விண்ணப்பித்த 610 பட்டியலின வகுப்பு மாணவர்களில் 5 பேருக்குச் சேர்க்கை வழங்கப்பட்டு சேர்க்கை விகிதம் 0.8 விழுக்காடாகவும், ஆனால் அதே நேரத்தில் பொதுப்பிரிவில் விண்ணப்பித்த 3,902 மாணவர்களில் 82 மாணவர்களுக்குச் சேர்க்கை வழங்கப்பட்டு சேர்க்கை விகிதம் 2.1 விழுக்காடாக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள் அலுவலகத்தின் மீது குண்டு வீசி தாக்கியதன் எதிரொலி: காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள்

கம்பியூட்டர் சயின்ஸ் துறையில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடி வகுப்பு மாணவர்களின் சேர்க்கை விகிதங்கள் முறையே 0.6%, 0.8%, 1.3% விழுக்காடாக இருக்கும் நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களின் சேர்க்கை விகிதம் 2.3 விழுக்காடாக உள்ளது.

பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பு மாணவர்களில் ஒருவருக்கு கூட சேர்க்கை வழங்காத துறைகளாக சென்டர் பார் ஸ்டடீஸ் ஆப் ரிசோர்ஸ் எஞ்சினியரிங் (சிஎஸ்ஆர்இ), எஸ்ஜேஎம் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் ஆகியவை இருப்பதாகவும் தி இந்து தெரிவித்துள்ளது.

இந்தத் துறைகளுக்கு மொத்தமாக விண்ணப்பத்த 1,780 பொது பிரிவு மாணவர்களில் 74 மாணவர்களுக்குச் சேர்க்கை வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் விண்ணப்பித்த 313 பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களில் ஒருவருக்கு கூட சேர்க்கை வழங்கப்படவில்லை.

குடியரசு தின கொண்டாட்டங்களைக் கட்டாயப்படுத்தியதாகச் செய்தி வெளியிட்ட விவகாரம் – ஊடகவியலாளர்களுக்கு இடைக்கால ஜாமீனை மறுத்த ஜம்மு & காஷ்மீர் நீதிமன்றம்

சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் (இஎஸ்இ) மற்றும் கொள்கை ஆய்வுகளுக்கான மையம் ஆகியவை இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டால் ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பிய துறைகள் .

இ.எஸ்.இ மற்றும் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் (எச்.எஸ்.எஸ்) துறைகள் பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் நிர்ணயித்த அளவிற்கு நெருக்கமான அளவில் சேர்க்கை  விகிதங்களைக் கொண்டிருக்கிறது.

நேர்காணல் நிகழ்வுகளில் அதிக மாணவர்கல் ஓரம் கட்டப்படுகின்றனர், என தகவல் தெரிவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘விவசாயிகளின் உயிரிழப்புகள் ஆண்டின் சராசரி இறப்பு விகிதத்தோடு சமனில் உள்ளது’ – பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களில் விகிதாச்சாரங்களை ஒப்பிடுகையில், விண்ணப்பிக்கும் போதும், நேர்காணலின்போது அவர்களின் விகிதாச்சாரஙக்ள் ஒரே மாதிரி இருப்பதாகவும், மொத்த விண்ணப்பங்களில் 12 விழுக்காடு நிராகரிக்கப்பட்டு, 88 விழுக்காடு நேர்காணல் நிலைக்கு வருவதாகவும் அந்த் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணலுக்குப் பிறகு தேர்வாகும் மாணவர்களில் எல்லா பிரிவிலும் அதிகமாக பொதுப்பிரிவினர் 71.6 விழுக்காடு தேர்வாகின்றனர்.

விண்ணப்பிக்கும் நிலை மற்றும் நேர்காணல் நிலையில் பொதுப்பிரிவினர் பொதுப்பிரிவினர் 64.8 விழுக்காக இருக்கும் நிலையில்,  இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியன வகுப்பினர் முறையே 22.2%, 11.1%, 1.9% ஆக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பாக பதிலளித்துள்ள, மும்பை ஐஐடி நிர்வாகம் தேர்வு முறை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஐஐடி-களில் அநியாயமாக மறுக்கப்படும் இட ஒதுக்கீடு –  ஆர்டிஐ மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்

”இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்களை நிரப்புவதற்காக, குறைந்த கட்-ஆப் மதிப்பெண்கள் மற்றும் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என மும்பை ஐஐடியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

சேர்க்கை விகிதம் மாறுபடுவது தொடர்பாக பேசிய செய்தி தொடர்பாளர், ”முனைவர் ஆராய்ச்சி படிப்பிற்கு தேவையான மாணவர்கள் உள்ளீடுகள் தொடர்பாக அதிக எதிர்பார்ப்புகளை ஐஐடி வைத்திருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தச் செய்தி தொடர்பாளர், “ஒரு சில துறைகளில் போதுமான மாணவர்கள் இருக்கின்றனர், ஆனால் வேறுசில துறைகளைப் பொருத்த வரை, முனைவர் படிப்பின் போதும், படித்தபிறகு கிடைக்கும் குறைவான வருமானம் மற்றும் ஒரு நிச்சயமற்ற தன்மை காரணமாக மாணவர் முனைவர் படிப்பைக் காட்டிலும் தொழிற்துறை வேலைகளைத் தேர்வு செய்கின்றனர். முனைவர் படிப்பிற்கு விண்ணப்பதில் மாணவர்களின் குடும்பப் பிண்ணனி மற்றும் பொருளாதார நிலையும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது தொடர்பான முறையாக சமூக பொருளாதார ஆய்வு தேவைப்படுகிறது” என தெரிவித்தாக தி இந்து கூறியுள்ளது.​

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்