Aran Sei

பதினெட்டு வயது எட்டியவர்கள் சேர்ந்து வாழ்வதை பெற்றோர்கள் கூட தடுக்க முடியாது – அலகாபாத் உயர்நீதிமன்றம்

ந்த மதத்தினைச் சேர்ந்தவராக  இருந்தாலும் பதினெட்டு வயதினை எட்டியவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமென அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயதான இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த  பெண்னை, 24  வயதான இந்து மதத்தைச் சேர்ந்த ஆண்  மணந்த நிலையில், மணமகனின் வீட்டார் அவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்,  இணையர்கள் பாதுகாப்பு வேண்டி மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும்,  அந்த மனுவில்  இஸ்லாமிலிருந்து இந்து மதத்திற்கு மாறவும் அந்தப் பெண் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற அமர்வு, “யாராக இருந்தாலும் பெற்றோராக இருந்தாலும் பதினெட்டு வயதினை எட்டியவர்கள் சேர்ந்து வாழ்வதை தடுக்க முடியாது”. என்றும் கூறியுள்ளது.

Source:Thewire

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்