புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஒன்றிய அரசு செயல்படுத்தும் உதவி மையத்தின் எண்கள் போதிய அளவில் செயல்படவில்லை என்று சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களுக்கான (SWAN) நடவடிக்கை குழு தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த அமைப்பை சேர்ந்த 80 தன்னார்வலர்கள் நாடுமுழுவதிலும் 20 மண்டலங்களில் இருந்து , உதவி எண்ணிற்கு அழைத்தபோது,நட்புணர்வுடனும் போதிய விவரங்கள் தெரிவிக்கும் வகையிலும் பதிலளிக்கவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,புலம்பெயர் தொழிலாளர்களை வீட்டின் உரிமையாளர் விரட்டுதல்,உணவுத் தேவை, போதிய பணமின்றி தவித்தல்,சொந்த ஊருக்கு திரும்ப செலுத்தல், பணிபுரிந்த இடத்தில ஊதியம் அளிக்கப்படாமல் இருத்தல் போன்ற எண்ணற்ற உதவிகளுக்கு சரிவர பதிலளிக்கவில்லை என்றும் எஸ்.டபிள்யு.எ.என் அமைப்பை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், மத்திய தொழிலாளர் மற்றும் பணியாளர்கள் அமைச்சகம், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மீண்டும் உதவி எண்ணுடன் கட்டுப்பாட்டு மையத்தை செயல்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்.டபிள்யு.எ.என் அமைப்பிற்கு கடந்த மே மற்றும் ஏப்ரலில் ஏறத்தாழ 10,000 தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் அதில், 33% ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், 15% பேர்களுக்கு குறைவான ஊதியம் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களுக்கான (SWAN) நடவடிக்கை குழு கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.