Aran Sei

நாங்கள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை – ஜோடிக்கு பாதுகாப்பளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

நாங்கள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வீடியோகான் நிறுவனத்திற்கு 61 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி – அடிமாட்டு விலைக்கு வாங்கிய வேதாந்தா நிறுவனம்

உயர்நீதிமன்ற நீதிபதிகளான கௌஷல் ஜெயேந்திர தாக்கர் மற்றும் தினேஷ் பதக் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த ஜோடிக்கு பாதுகாப்பது அளித்து உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த ஜோடி பாதுகாப்பு வேண்டி தாக்கல் செய்த மனு நிலுவையில் இருந்த போதே அவர்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆன பெண் மற்றும் அவரோடு திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்த ஆண் ஆகிய அந்த ஜோடி இதற்கு முன்னர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்ததாகவும், 5000 ரூபாய் அபராதம் விதித்திருந்ததாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பை விமர்சிக்கும் வகையில் கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா – ட்விட்டர் கணக்கு குறித்து புகார் அளித்த ஒன்றிய அரசு

மேலும், அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர், அவர் திருமணம் ஆகாத வேறொரு ஆணுடன் வசித்து வருவது, இந்து திருமண சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, முன்னர் தாக்கல் செய்திருந்த மனுவை, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பளித்து உத்தரவிட்ட சமீபத்திய மனுவில்,”நாங்கள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை” என்று உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை இராணுவமயமாக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசு – உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்

இந்த உத்தரவு இதற்கு முன்னர் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் அடிப்படையில் வழங்கப்படுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், அந்த ஜோடி க்கு அவர்களது குடும்பம் கொடுத்த அச்சுறுத்தலின் காரணமாக, அவர்கள் மீண்டும் இந்த மனுவை தாக்கல் செய்திருந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்