Aran Sei

‘அசாமிய மொழியை அழிக்க ஒன்றிய அரசு முயல்கிறது’ – அமித் ஷாவின் பேச்சுக்கு வடகிழக்கு மாநில அமைப்புகள் கண்டனம்

டகிழக்கு பிராந்தியத்தில் ஒன்றிய அரசு இந்தியை திணிப்பதாக அப்பிராந்தியத்தின் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்தி அல்லாத பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

அமித் ஷாவின் பேச்சிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

“இந்த நடவடிக்கை ஒரு வகையான திணிப்பு என்பதால் நாங்கள் எதிர்க்கிறோம். இந்தி ஒரு விருப்பப் பாடமாக வேண்டுமானால் இருக்கலாம். இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என அனைத்து மாநில அரசுகளிடமும் நாங்கள் கோருகிறோம்” என்று வடகிழக்கு மாணவர் அமைப்பின் தலைவர் சாமுவேல் பி ஜிர்வா தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா பேசியதன் எதிரொலி – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #இந்தி_தெரியாது_போடா

இது குறித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேகாலயா சட்டப்பேரவை உறுப்பினர் அம்பரீன் லிங்டோ கூறுகையில், அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையால் ஒரு மாநிலம் பாதுகாக்கப்படுகிறது என்றும் அதனால், மாணவர்கள் மீது இந்தி மொழியை ஒன்றிய அரசு திணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், “காசியும் கரோவும் நமது மாநிலத்தின் இரண்டு முக்கிய மொழிகள். ஆகவே, இதை (இந்தி) நாங்கள் அனுமதிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

“ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது. இது ஜனநாயக விரோதம், அரசியலமைப்புக்கும் கூட்டாட்சி அமைப்புக்கும் எதிரானது” என்று அசாமில் உள்ள கிரிஷக் முக்தி சங்க்ராம் சமிதி விமர்சித்துள்ளது.

இந்தியை எதிர்ப்பது ஏன்? – தோழர் தியாகு

கிரிஷக் முக்தி சங்க்ராம் சமிதியின் மாணவர் பிரிவான சத்ர முக்தி சங்க்ராம் சமிதி, அமித் ஷாவின் கருத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளது. மேலும், அசாமிய மொழியை அழிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக அவ்வமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

Source: New Indian Express

மாநிலங்கள் தங்களுக்குள் பேச இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு ஊடகவியளாலர் ஜீவசகாப்தன் எதிர்வினையாற்றியுள்ளார்.

தமிழுக்கு முன்னடி இந்தி ஒன்னுமே இல்ல… மேலும் தெரிந்துகொள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்