Aran Sei

கடவுளை ‘அல்லாஹ்’ என அனைத்து மதத்தினரும் அழைக்கலாம்: மலேசியா உயர் நீதிமன்றம் உத்தரவு

டவுளை ”அல்லாஹ்” என அனைத்து மதத்தினரும் அழைக்கலாம் என மலேசிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடாகும். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் (32 லட்சம்) மூன்றில் இரண்டு பங்கினர் இஸ்லாமியர்கள், இதையடுத்து சீனர்களும், இந்தியர்களும் வசிக்கின்றனர். இந்நாட்டில் 10 சதவீத கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர்.

அங்கு வசிக்கும் கிறிஸ்துவர்கள் ஆங்கிலத்திலும், தங்கள் தாய்மொழிகளான தமிழிலும், சீன மொழியிலும் கடவுளை வழிப்படுகின்றனர். ஆனால், அங்கு வாழும், மலாய் பேசும் மக்கள் கடவுளை ”அல்லாஹ்” என்று அழைக்கின்றனர். (அந்த மொழியில் கடவுளைக் குறிப்பிடுவதற்கு வேறு எந்த வார்த்தையும் இல்லை)

பேய்ச்சி நாவலைத் தடை செய்த மலேசிய அரசு – அதன் ஆசிரியரோடு ஓர் உரையாடல்

இதனிடையே, கடந்த 1986 ஆம் ஆண்டு, மலேசிய அரசாங்கம் அல்லாஹ் (இறைவன்), காபா (மெக்காவில் இருக்கும் புனித தளம்), பைத்துல்லாஹ் (இறைவனின் இல்லம்), சோலத் (வழிபாடு) ஆகிய வார்த்தைகளை மாற்று மதத்தினர் (இஸ்லாமியர்கள் அல்லாதோர்) பயன்படுத்தக் கூடாது, என்று உத்தரவிடப்பட்டதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக ரப்பர் தொழிலாளர்கள் குறித்த நாவல் – தடை விதித்த மலேசிய அரசு

இந்நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு, இந்தோனேசியாவிலிருந்து மலேசியா திரும்பிய அன்னாவ் சேவியர் எனும் கிறிஸ்துவ பெண் வைத்திருந்த மத ஆவணங்களில் ’அல்லாஹ்’ என்ற பெயர் இருந்ததால், அது  அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

’டெல்லியில் ராமராஜ்யம் அமைக்க போராடி வரும் ஆம் ஆத்மி’ – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

இதைக் கண்டித்து  அன்னாவ் சேவியர் மலேசிய உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மலேசிய உயர் நீதிமன்றம், கடந்த 35 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வழக்கத்தை ரத்து செய்து, இறைவனை ’அல்லாஹ்’ என்று அனைத்து மதத்தினரும் குறிப்பிடலாம் என உத்தரவிட்டுள்ளது.

” 4 மாநில தேர்தல்களுக்கு முன்பு தேர்தல் நிதி பத்திரங்கள் மீதான வழக்கு விசாரணை தேவை ” – பிரசாந்த பூஷண்

மலேசியாவில், இறைவனை அல்லாஹ் என அழைப்பது தொடர்பான சர்ச்சையால் மத வழிப்பாட்டு தளங்கள், தேவாலயங்கள் போன்றவை தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்