Aran Sei

நடிகை கங்கனா ரணாவத்துக்கு வாரண்ட் – பாடலாசிரியர் தொடுத்த அவதூறு வழக்கில் நடவடிக்கை

பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடுத்த அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்கு, நடிகை கங்கனா ரணாவத் ஆஜராகாததால், அவருக்கு எதிராக, பிணையில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்களை வெளியிட்டு, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, நடிகை கங்கனா ரணாவத் மீது பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரி பெருநகர நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 1 ஆம் தேதி ஆஜராகும்படி கங்கனா ரணாவத்துக்கு சம்மன் அனுப்பியது.

சர்ச்சைக்குரிய கருத்துகள் – கங்கனா ரணாவத்தின் பதிவுகளை நீக்கிய டிவிட்டர் நிறுவனம்

இந்நிலையில், கங்கனா இன்று நீதிமன்ற்ததில் ஆஜராகத் தவறியதை தொடர்ந்து, அந்தேரி நீதிமன்றம் அவருக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை, வரும் மார்ச் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்