Aran Sei

தொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.

டந்த ஜனவரி 12 ஆம் தேதி, கைது செய்யப்பட்ட தொழிற்சங்கவாதி நோதீப் கவுருக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்த தலித் தொழிலாளரும், மஜ்தூர் அதிகார் சங்கதான் என்ற தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினருமான நோதீப் கவுர், டெல்லி – ஹரியானா எல்லையில், சோனிபட்டில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்துள்ளார். ஹரியானா மாநிலம் குந்தலி பகுதியில், நடந்த சம்பள உயர்வு போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை நவ்தீப் கவுர் மீது கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், திருட்டு, கலகம், சட்டவிரோதமாக கூட்டம் கூடியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது.

வெள்ளத்தில் பலியான உயிர்கள்: கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வது எப்போது? – கௌரவ் விவேக் பட்நாகர்

நோதீப் கவுர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள நோதீப் கவுரின் சகோதரி ராஜ்வீர் கவுர், ”நோதீப் கவுர் காவல்நிலையத்தில், ஆண் காவலர்களால், தாக்குதல் மற்றும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார். அவருடைய  அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் கடுமையான நடவடிக்கை வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

காவல்துறை என்னை தாக்கியது – ஜாமீன் மனுவில் நோதீப் கவுர் குற்றச்சாட்டு

”போராட்டக்காரர்கள் தாக்கியதில் ஒரு பெண் காவலர் உட்பட ஏழு காவல்துறயினர் காயமடைந்துள்ளனர். பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானார் என்பது ஒரு கற்பனை. அதை முற்றிலும் மறுக்கிறோம். மேலும் கவுருடன் இரண்டு பெண் காவலர்கள் எப்போதும்  இருக்கின்றனர்” என சோனிபட் காவல் நிலையம் விளகக்கம் அளித்தது.

தொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுரின் சட்டவிரோத கைது – ஹரியானா அரசிற்கு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

இந்நிலையில், நோதீப் கவுர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், நோதீப் கவுர் தவறாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும், குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 54 ஐ மீறும் விதமாக, அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தபடவில்லை எனவும் குறிப்பிடப்பட்டது.

கோவாக்சின் தடுப்பு மருந்தின் செயல்திறன் தரவுகள் – இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அறிவிப்பு

இதற்கிடையிலி, நோதீப் கவுர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டில், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. நேற்றைய தினம், அவரது மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் அரசால் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், நீதிமன்றம் வழக்கை  ஒத்திவைத்தது.

தொழிலாளர், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் இளம் பெண் – காவல் நிலையத்தில் சித்திரவதை

இந்நிலையில், இன்றைய தினம் இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம், நோதீப் கவுருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நோதீப் கவுரின் கைதை கண்டித்து அமேரிக்காவைச் சேர்ந்த செயல்பாட்டாளர் மீனா ஹாரிஸ் (அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினர்), ட்வீட் செய்த பின்னர், நோதீப் கவுர் கைது, சர்வதேச கவனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்