Aran Sei

காவல்துறை என்னை தாக்கியது – ஜாமீன் மனுவில் நோதீப் கவுர் குற்றச்சாட்டு

டந்த மாதம் ஹரியானா காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நோதீப் கவுர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தனது ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் சோனிபட் காவல்நிலையத்தில் வைத்துக் காவல்துறை தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

வழக்கறிஞர்கள் அர்ஷ்தீப் சிங் சீமா மற்றும் ஹரிந்தர் தீப் சிங் பெய்ன்ஸ் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுவில், நோதீப் கவுரை சோனிபட் காவல்நிலையத்தில் வைத்துக் காவல்துறை கடுமையாக தாக்கியதாகவும், அதில் அவர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவிக்கு ஜாமீன் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், நோதீப் கவுர் தவறாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும், குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 54 ஐ மீறும் விதமாக, அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தபடவில்லை எனவும் அந்த ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பு மருந்தின் செயல்திறன் தரவுகள் – இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என அறிவிப்பு

மஜ்தூர் அதிகார் சங்கதான் என்ற தொழிலாளர் உரிமை அமைப்பின் உறுப்பினரான நோதீப் கவுரை, சோனிபட் மாவட்டத்தில் குண்டலி பகுதியில், அமைந்திருக்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனப் போராடியபோது, ஜனவரி 12 ஆம் தேதி ஹரியான காவல்துறை கைது செய்தது.

நோதீப் கவுர் ஜாமீன் மீதான விசாரணையை பிப்ரவரி 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்