Aran Sei

2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு – இந்திய பத்திரிகையாளர்கள் முகமது ஜுபைர், பிரதிக் சின்ஹா பெயர் பரிந்துரை

2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் முகமது ஜுபைர் மற்றும் அவரது நண்பர் பிரதிக் சின்ஹா ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றன.

பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முகமது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார்.

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் இஸ்லாமியர் என்பதால் தான் கைது செய்யப்பட்டுள்ளார்: வழக்கறிஞர் பிருந்தா குரோவர் கருத்து

நுபுர் ஷர்மாவின் இந்த சர்ச்சை கருத்தை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆல்ட் நியூஸ் ஆசிரியரும் பத்திரிகையாளரும் முகமது ஜுபைர் என்று கூறப்படுகிறது.

ஆல்ட் நியூஸ் என்ற உண்மை செய்திகளை கண்டறியும் இணையதளத்தை தன்னுடைய நண்பர் பிரதிக் சின்ஹாவுடன் இணைந்து இவர் நடத்தி வருகிறார். நுபுர் ஷர்மாவின் பேச்சு தொடர்பாக தனது ஆல்ட் நியூஸ் இணையதளத்தில் முதன்முதலில் செய்தி வெளியிட்ட அவர், தனது ட்விட்டர் பக்கத்திலும் அந்த காணொளியைப் பகிர்ந்து இருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்தன.

பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது – எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கண்டனம்

தொடர்ந்து மதக்கலவரங்களை தூண்டும் விதத்தில் பகிரப்படும் பொய்யான செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிந்து வெளியிட்டு வந்த ஜுபைர் ட்விட்டரில் தனது கருத்துக்களையும் தெரிவித்து வந்தார். சாமியார்கள் மாநாட்டில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என பேசியதற்காக கடும் விமர்சனங்களை முன்வைத்த ஜுபைர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தார்.

இதுகுறித்து பன்னாட்டு பத்திரிகையாளர் அமைப்பான CPI (Committee to Protect Journalists) அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. CPI வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அமெரிக்க நாளிதழான வாஷிங்டன் போஸ்டின் ஊடக பாதுகாப்புக்குழு, “பத்திரிகைத்துறை ஒன்றும் குற்றமில்லை” என்று பதிவிட்டது.

பாரபட்சமாக செய்தி வெளியிடும் ஏஎன்ஐ நிறுவனம் : ஆல்ட்நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் ட்விட்டர் பதிவு

இந்த நிலையில், தற்போது பல்வேறு பிரிவுகளின் கீழ் 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் முகமது ஜுபைர் மற்றும் பிரதிக் சின்ஹா ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக சர்வதேச இதழான டைம் தெரிவித்துள்ளது.

Source : NDTV

Ponniyin Selvan Decoded | Nathan Explains Manirathnam’s Cinema Politics | Vaathi Raid | Aransei

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்