Aran Sei

டெல்லி கலவர வழக்கில் நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித்– சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

டெல்லி கலவர வழக்கில் தொடர்பிருப்பதான குற்றச்சாட்டில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலத்தை கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு, புகழ்பெற்ற அறிஞர்கள் நோம் சோம்ஸ்கி, மகாத்மா காந்தியின் பேரன் மற்றும் நான்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

செப் 14, 2020 ஆம் தேதி, கைது செய்யப்பட்ட உமர் காலித்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமைக்கான இந்துக்கள், இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்சில், தலித் ஒற்றுமை மன்றம், இந்தியா சிவில் வாட்ச் இண்டர்நேஷனல் ஆகிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்ததாக உமர் காலித் மீது டெல்லி காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஜேஎன்யு முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் பிணை மனு – தினசரி விசாரணைக்கு ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம்

காலித்தின் பிணை மனுமீதான தீர்ப்பு மூன்று முறை டெல்லி நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மார்ச் 23 தேதி ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக நோம் சோம்ஸ்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான வன்முறைகள் மக்களின் உரிமைகளையும் சுதந்திரமான நடைமுறையையும் வெளிப்படையாக குறைமதிப்பிற்கு உட்படுத்து வருகிறது. இது இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் கெளரவமான பாரம்பரியத்தை தகர்த்து, ஒரு இந்து இனத்துவத்தை திணிப்பதற்கான அரசாங்கத்தின் பெரிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாகும்.” என்று கூறியுள்ளார்.

டெல்லி கலவர வழக்கு: உமர் காலித் பிணை மனுவை தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்

மேலும், “குடியுரிமையின் அடிப்படை உரிமையான, பேசுவதற்கும் எதிர்ப்பதற்கும் ஒருவர் தனது அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்துகிறார் என்பதே ஒரு சுதந்திர சமூகம் என்பதற்கான முன்வைக்கப்பட்ட ஒரே நம்பகமான ஆதாரம் ஆகும்.” என்று தெரிவித்துள்ளார்.

கொடூரமான பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மீண்டதற்காகப் பாராட்டப்பட்ட இந்திய ஜனநாயகத்தின் தன்மை சமீபத்தில் “ஆழ்ந்த வருத்தமளிக்கும் வகையில்” பின்னோக்கிச் சென்றுவிட்டது என்று சோம்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

கைவிலங்குடன் ஆஜர்ப்படுத்தப்பட்ட உமர் காலித் – விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

இலியானாஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பேராசிரியரான ராஜ்மோகன் காந்தி, உமர் காலித்தின் புலமைப் பங்களிப்புகளை குறிப்பிட்டு காணொளி வெளியிட்டுள்ளார்.

”இந்தியா அதன் மிகச்சிறந்த மனங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது, இது ஒரு உணர்வுபூர்வமான மனசாட்சியால் வலுவூட்டப்படுகிறது… இந்தியாவின் இந்த புத்திசாலித்தனமான இளம் மகன் இப்போது தொடர்ந்து 20 மாதங்களாக மௌனமாக்கப்பட்டுள்ளார்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

காலித்தின் தொடர்ச்சியான மெளனம் என்பது உலகில் இந்தியாவின் பிம்பத்திற்கு ஒரு கறையாகவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஒரு தடையாகவும் உள்ளது என்று காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Source: The Wire

Udaipur சம்பவமும் BJP – RSS ன் சதி திட்டமும் | Vanchinathan | BJP Udaipur Tailor Kanhaiya Lal Video

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்