உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஒரு பெண் நியமிக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளார்.
நீதிபதி சுனந்தா பாண்டரேவின் 26 வது நினைவு நாளில் “பெருமைமிகு பெண்களின் வரலாறு” என்ற தலைப்பில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு பெண் குடியரசுத்தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறார்; ஒரு பெண் பிரதமராக நியமிக்கப் பட்டிருக்கிறார்; ஆனால் ஒரு பெண் கூட இதுவரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படாதது வருத்தத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
மறைந்த நீதிபதி பண்டாரே குறித்து பேசிய நீதிபதி நாரிமன் “இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவதற்கான தகுதி அவருக்கு இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக குறைந்த காலத்திலேயே அவர் மறைந்தார்” என்றும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
source; the hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.