மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு வாக்கு இல்லை (NO VOTE TO BJP) என்று எழுதியிருந்த சுவரொட்டிகளில் பாஜகவினர், பாஜகவிற்கு வாக்கு செலுத்தங்கள் (VOTE TO BJP) என்று திருத்தி எழுததியதற்கு எதிராக குரல் கொடுத்த சமூக செயற்பாட்டாளரிடம் பாஜக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தி குவிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாஜகவை தேர்தலில் தோற்கடிப்பது மட்டுமல்லாமல், சமுதாயத்தில் இருந்தே ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட பல்வேறு மக்கள் மற்றும் சமூக இயக்கங்கள் இணைந்து, ”பாசிச ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எதிரான மேற்குவங்கம்” எனும் அமைப்பைத் தொடங்கியிருந்தனர். இந்த அமைப்பின் முக்கிய கொள்கையாக, ” பாஜகவிற்கு வாக்கு இல்லை” என்பதாகும். இந்த அமைப்பு மேற்கு வங்கத்தில் உள்ள 15 மாவட்டங்களில் குழுக்களை அமைத்துள்ளது.
இந்த அமைப்பு மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாஜகவிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் ”பாஜகவிற்கு வாக்கு இல்லை” என எழுதியிருக்கும் சுவரொட்டிகளையும், பதாகைகளையும் வைத்துள்ளனர்.
வங்க மண்ணில் பாஜகவினர் சுதந்திரமாக நடமாட முடியாது – எச்சரிக்கை விடுத்துள்ள மம்தா
இந்நிலையில், கொல்கத்தாவில் இருக்கும், இந்தியன் காபி ஹவுஸ் எனும் உணவகத்தின் வெளியே ”பாஜகவிற்கு வாக்கு இல்லை” என்று எழுதப்பட்டிருந்த சுவரொட்டிகளில் ”பாஜகவிற்கு வாக்கு செலுத்தங்கள்” என்று பாஜக தொண்டர்கள் திருத்தி எழுதியுள்ளனர். அவர்களுடன் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தஜிந்தர் பால் சிங் பக்கா உடனிருந்தார்.
#NoVoteToBJP ( @No_Vote_To_BJP ) activists allegedly heckled by '#BJP goons'. Videos show them painting over No Vote to BJP posters. pic.twitter.com/mVreSEGlQE
— Debayan Dutta (@AprturePriority) March 15, 2021
அந்த உணவகத்தில் சக தோழர்களுடன் இருந்த சமூக செயற்பாட்டாளரான மாதுரிமா பாக்ஷி, இந்த சம்பவத்தைக் கண்டித்து குரல் கொடுத்துள்ளார். இதனால் அவர் பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.
When @Madhurima_ML tried to protest against them, she was allegedly heckled. Soon after, she and her friends started raising slogans at them. They also claim that BJP MLA Tajinder Bagga was present at the scene too. pic.twitter.com/MbIYWXN9kJ
— Debayan Dutta (@AprturePriority) March 15, 2021
இதைக் கண்டித்து மாதுரிமா பாக்ஷி மற்றும் அவருடன் இருந்த தோழர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். பாஜகவினரும் ஜெய் ஸ்ரீராம், ஹர ஹர மகாதேவ், வந்தே மாதரம், கர் கர் மோடி போன்ற கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.