Aran Sei

நாடாளுமன்றக் குழு கூட்டத்தை இணையவழியில் நடத்த வேண்டும் – காங்கிரஸ் கட்சி கோரிக்கை

Image Credits: The Hindu

நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இயற்றப்பட்டுள்ள முக்கிய விதிகளைத் திருத்தம் செய்யாமல் நாடாளுமன்றக்குழு கூட்டத்தை இணையவழியில் நடத்த இயலாது என்று மாநிலங்களவைக்கான செயலகம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதத்திற்கு, மே 14 அன்று மாநிலங்களவைக்கான செயலகம் இவ்வாறு பதிலளித்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் – காங்கிரஸ் கோரிக்கை

இதே போன்று, கொரோனா இரண்டாம் அலையில் தொற்றுப் பரவல் அதிகரித்து நிலையில், அரசின் செயல்பாடுகளைப் பாகுபாடற்று ஆய்வு செய்யும் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் ஒருமுறைக்கூட நடைபெறவில்லை என்றும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,  நாடாளுமன்றக்குழு கூட்டத்தை இணையவழியில் நடத்தவேண்டுமென ஓராண்டுக்கு முன்னரே கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், எனினும், கொரோனா தொற்று பரவல் குறைவாக இருந்த சிலமாதங்கள் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையிலும் இணையவழியில் நடத்துவதற்கு தகுந்தவாறு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த செய்தி கூறுகிறது.

ஆக்சிஜன் சிலிண்டர் தேவையென ட்விட்டரில் பதிவிட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் – உடனடியாக உதவிய இளைஞர் காங்கிரஸ் தலைவர்

இந்நிலையில், கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவையின் அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு எழுதிய கடிதத்தில், “மக்கள் துன்புறும் வேளையில் நாடாளுமன்றம் மௌனமாக இருக்கக் கூடாது. உடனடியாக இணையவழியில் கூட்டத்தொடரை நடத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்ததாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு, வெங்கையா நாயுடு மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு இடையே நடைபெற்ற எண்ணற்ற கூட்டத்தில், அவைகளின் கூட்டத்தின் ரகசியத்தன்மை காப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், நாடாளுமன்றக்குழு கூட்டத்தை நேரடியாக நடத்துவதின் வழியாகவே அவை நடைமுறைகளின் ரகசியத்தன்மையை உறுதிப்படுத்த இயலும் என்று தெரிவித்ததாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், இரு அவைகளில் இயற்றப்பட்ட சட்டத்தை மேற்கோளாகக் காட்டி வெளியிட்ட அறிவிப்பில், விதிகளை பின்பற்றிக் குழுக்கூட்டம் நடைபெற வேண்டும். இந்த விவகாரத்தை உடனடியாக செயல்படுத்தும் சூழல் எழவில்லை என்றும் கூறியிருந்ததாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நாடாளுமன்றம் கட்டுவதை கைவிட்டு தடுப்பூசி கொள்முதல் செய்ய வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி

இந்நிலையில், மாநிலங்களவை செயலகம், கொரோனா பரவல் சூழல் சரியானதும் நாடாளுமன்றக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு உறுதியளித்துள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

மேலும், மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அவை நடைமுறைகளின் ரகசியத்தன்மை காப்பது தொடர்பான விதிகளில் இரு அவைகளும் திருத்தம் கொண்டு வந்த பின்னரே விதிகளுக்கான குழு கருத்தில் எடுத்துக் கொள்ளும்” என்று கூறியிருந்ததாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இது ஒரு போர் சூழல்; கொரோனா குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்’ – மத்திய அரசை வலியுறுத்தும் சிவசேனா

இதே போன்று, மூத்த காங்கிரஸ் தலைவரும், உள்துறை குழுவின் தலைவருமான ஆனந்த் சர்மா வெங்கையா நாயுடுவிற்கு இதே கோரிக்கையை முன்வைத்து எழுதிய கடிதத்தில், “ஜனநாயகத்தில், பொறுப்புகளைத் தாமதப்படுத்தவோ அல்லத தவிர்க்கவோ கூடாது” என்று தெரிவித்ததாக தி இந்து செய்தி குறிப்பிடுகிறது.

மேலும், இதுகுறித்து அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்திற்கான குழுவின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாடாளுமன்றக்குழு கூட்டத்தை இணையவெளியில் நடத்த வேண்டுமென ஓராண்டுக்கும் மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு விவரிக்க இயலாத வகையில் மறுத்து வருகிறது . பிரதமர் எல்லா கூட்டங்களிலும் இணையவெளியில் பங்கேற்கலாம் ஆனால் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களைக்  கொண்ட  நாடாளுமன்றக்குழு கூட்டம் மட்டும் இணையவழியில் நடைபெற முடியாது” என்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்