Aran Sei

ஜம்மு காஷ்மீரில் தடுப்பு மருந்து பற்றாக்குறை: 1.4 கோடி பேரில் 504 பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்ட அவலம்

Image Credits: The Hindu

டுப்பு மருந்து பற்றாக்குறையால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் தடுப்பு மருந்து செலுத்த முடியாத சூழல் நிலவவுவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், 1.4 கோடி பேர் வாழக்கூடிய 10 மாவட்டங்களில் வெறும் 504 பேருக்கு மட்டுமே தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீநகர் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட தடுப்பு மருந்து செலுத்தப்படவில்லை என்று அந்தச் செய்தி கூறுகிறது.

கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான தரவுகளை வெளியிட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மனு

இதுகுறித்து தெரிவித்துள்ள உயர் அதிகாரி, கடந்த மே 8 அன்று கடைசியாக தடுப்பு மருந்து பெற்றதாகவும், தற்போது தடுப்பு மருந்து இருப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை வரை 3,677 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாகவும், 63 பேர் இறந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

‘தடுப்பு மருந்துக்காக மாநிலங்கள் சண்டையிட்டுக் கொள்கின்றன; இந்தியா என்ற நாடு எங்கே போனது?’ – அரவிந்த் கெஜ்ரிவால்

மேலும், ஜம்மு காஷ்மீர் பகுதியில் இதுவரை 28 லட்சம் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினரும் இந்த எண்ணிக்கையில் அடங்கும் எனவும், பெரும்பாலான பாதுகாப்பு படையினர் இரண்டு டோஸ் தடுப்பு மருந்தையும் செலுத்திக்கொண்டுள்ளதாகவும் என்டிடிவி செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்