Aran Sei

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க முடியாது – மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அறிவிப்பு

தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க வேண்டும் என்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் நிராகரித்துள்ளார்.

இளைஞர்களை தவறாக வழிநடத்தும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பிரதமரே விளம்பரப்படுத்தலாமா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பதிலளித்த அஜித் பவார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து பேசியதைக் குறிப்பிட்ட அஜித் பவார், ஒன்றிய அரசு நினைத்தால் இப்படத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்து இந்தியா முழுவதுமே வரிவிலக்கு கொடுக்கலாமே என்று தெரிவித்துள்ளார்.

பாஜக அமைச்சரின் மகனால் கொல்லப்பட்ட விவசாயிகள் குறித்து ‘லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ என படம் எடுக்க வேண்டும் – அகிலேஷ் யாதவ்

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் இவ்வாறு கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தேசபக்தி மற்றும் தேசிய உணர்வுகளை வெளிப்படுத்துவதாக உள்ளதால், மகாராஷ்டிராவில் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பாஜகவின் 92 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோப்பையைச் சட்டப்பேரவையில் சமர்ப்பித்திருந்தனர்.

1980-களின் பிற்பகுதியில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் பாதிக்கப்படும் காஷ்மீர் பண்டிட்கள் பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் இந்த தி காஷ்மீர் ஃபைல்ஸ்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

உத்தரபிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்