Aran Sei

டெல்லி கலவர வழக்கில் நீதிமன்றம் விசாரணை நடத்த காவல்துறை ஒத்துழைக்கவில்லை – நீதிமன்றம் குற்றச்சாட்டு

டந்த 2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறை முறையான நீதிமன்ற விசாரணை நடைபெற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், டெல்லி காவல்துறை “குறைபாடு கொண்ட அணுகுமுறைகளோடு” செயல்படுவதாகவும்  டெல்லி நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி அருண் குமார் கார்க், இந்த வழக்கின் மீதான விசாரணை நடந்த பல நாட்கள் அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. மேலும், வழக்கின் மீதான கடைசி நாள் விசாரணையின்போது கூட அவர் ஆஜராகவில்லை. வழக்கு ஒத்திவைக்கப்பட்ட பின்னரே அவர் ஆஜரானார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழக்கின் விசாரணை அதிகாரி படிக்காததால், நீதிமன்றத்தில் பதிலளிக்க இயலாத நிலையிலேயே உள்ளார் என்றும்   நீதிபதி அருண் குமார் கார்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாது,  டெல்லி கலவரம் தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு  காவல்துறைத் தரப்பில் முறையான ஒத்துழைப்பு நல்காததால்  தவிர்க்க இயலாத வகையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும்  டெல்லி நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Source: Ndtv

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்