Aran Sei

துபாய் இளவரசி உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை – ஐக்கிய நாடுகள் சபை

துபாய் இளவரசி ஷேக்கா லத்தீபா உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

தான் பிணைக்கைதியாக அடைக்கப்பட்டிருப்பதாக, துபாய் அரசர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகளான ஷேக்கா லத்தீப்பாவின் காணொளியைப் பிபிசி ஒளிபரப்பியதை அடுத்து அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை ஐநா மனித உரிமை அலுவலகம் கோரியுள்ளது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேறும் முயற்சிக்குப் பிறகு, 35 வயதான ஷேக்கா லத்தீபாவை காணவில்லை.

ராஜஸ்தானில் ஆணவக்கொலை – பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையும் மீறி நடந்துள்ள பயங்கரம்

இது தொடர்பாக ஜெனீவாவில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

”ஜெனீவாவில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு பிரதிநிதிகளிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை” என ஐநா மனித உரிமை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ரூபர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்: வெளிவராத உண்மைகள்

ஷேக்கா உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டதா என்ற கேள்விக்கு இல்லையென கொல்வில் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாகக் கடந்த மாதம் கருத்து தெரிவித்திருந்த துபாய் அரச குடும்பத்தினர், “ஷேக்கா லத்தீபா மருத்துவ நிபுணர்கள் ஆதரவுடன் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார், சரியான நேரத்தில் பொது வாழ்க்கைக்கு திரும்புவார் என நம்புகிறோம்” எனக் கூறியிருந்தனர்

Source : AP

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்