Aran Sei

கொரோனா பரவலை தடுக்க ரயில் சேவைகள் நிறுத்தப்படுமா? – ரயில்வே வாரியம் விளக்கம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரயில் சேவைகளைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ திட்டம் இல்லை  என ரயில்வே வாரியம் விளக்கமளித்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்க மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதனால், ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. பொதுப்போக்குவரத்தின் காரணமாக கொரோனா அதிகரிக்கும் என்பதால் ரயில் சேவைகள் குறைப்படும் அல்லது நிறுத்தப்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்நிலையில், ரயில் சேவைகள் குறைக்கப்படவோ நிறுத்தப்படவோ மாட்டாது என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேளச்சேரியில் பிடிபட்டது – மறுவாக்குப்பதிவு நடைபெறுமா?

இது தொடர்பாக பேசிய ரயில்வே வாரியயத்தின் தலைவர் சுனீத் சர்மா, ”ரயில் சேவைகளைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வாறு வரும் செய்திகள் தவறானவை” எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில், அந்தக் குறிப்பிட்ட வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். தற்போது ரயிலில் கூட்டம் குறைவாகவே உள்ளது என்பதை ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரயில் சேவைக்குக் கொரோனா சான்றிதழ் தேவை என்ற தகவலும் தவறானது. அப்படி எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் ரயில் சேவைகள் குறைப்பது அல்லது நிறுத்துவது தொடர்பாக இதுவரை கோரிக்கை எதுவும் வரவில்லை என யில்வே வாரியயத்தின் தலைவர் சுனீத் சர்மா சுனில் சர்மா தெரிவித்துள்ளார்.

Source : PTI

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்