Aran Sei

‘அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியில் உள்ள யாரும் பாதிக்கப்படக் கூடாது’- மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிசா முதலமைச்சர் உத்தரவு

ன்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது மாவட்ட ஆட்சியர்களிடம், மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியால் நடத்தப்படும் அமைப்புகளில் உள்ள யாரும் குறிப்பாக உணவு மற்றும் உடல்நலம் தொடர்பாகப் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மிக அண்மையில், அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. ஒன்றிய அரசின் இந்த முடிவு பல்வேறு தரப்பிலும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
ஒடிசாவில் பல தொழுநோய் மற்றும் அனாதை இல்லங்களை மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி நடத்தி வருகிறது.
“ஒடிசாவில் உள்ள மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி நடத்தும் அமைப்புகளுடன் மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும், தேவைப்பட்டால் முதல்வர் நிவாரண நிதியில் இருக்கும் நிதியை, இதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Source : indian express
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்