Aran Sei

‘என்னைக் கைது செய்ய யாருக்கும் தைரியம் கிடையாது’ – இந்திய மருத்துவ சங்கத்திற்கு பாபா ராம்தேவ் எச்சரிக்கை

ல்லோபதி மருத்துவம் குறித்த பாபா ராம்தேவின் கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு தொடுக்கப்படும் என்ற இந்திய மருத்துவ சங்கத்தின் நோட்டிஸிற்கு, என்னைக் கைது செய்ய யாருக்கும் தைரியம் கிடையாது என்று பாபா ராம்தேவ் எச்சரித்துள்ளார்.

பாபா ராம்தேவ் மன்னிப்பு கோராவிட்டால் மானநஷ்டஈடு வழக்கு தொடரப்படும் – இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு

அல்லோபதி மருத்துவம் மற்றும் மருத்துவர்கள்குறித்து ராம்தேவ் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கம் நேற்று (மே 26) அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாபா ராம்தேவ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில், “என்னைக் கைது செய்ய யாருக்கும் தைரியம் கிடையாது, அவர்கள் வெறுமனே கூச்சலிடுகிறார்கள். அவர்களால் என்ன செய்ய முடியுமோ செய்யட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

‘அலோபதியால் லட்சக்கணக்கானோர் இறந்தாக கூறும் பாபா ராம்தேவ்’ – ஒன்றிய அரசு வழக்குத் தொடர மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் டி.டி.சௌத்திரி,  “ஒன்றிய அரசு இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் வழியாக வழங்கிய நடைமுறைகளையே நாங்கள் பின்பற்றி வருகிறோம். பாபா ராம்தேவ் நவீன மருத்துவத்தை இழிவுபடுத்துவதின் வழியாக ஒன்றிய, மாநில அரசுகளை இழிவுபடுத்தியுள்ளார். எனவே, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தன்னிச்சையாக முன்வந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்.” என்று கோரியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்