Aran Sei

நீதா அம்பானியை வருகைதரு பேராசிரியாக நியமிக்க அதிகாரப்பூர்வ முடிவுகள் எடுக்கப்படவில்லை – பனராஸ் இந்து பல்கலைக்கழகம்

னராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியாக நீதா அம்பானியை நியமிப்பதற்கான எந்த அதிகாரப்பூர்வ முடிவுகளும் எடுக்கப்படவில்லை என பனராஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பாடத்தின் மூத்த பேராசிரியர், கே.கே.மிஷ்ரா, பல்கலைக்கழகத்தின் மகளிர் மேம்பாட்டு ஆய்வு மையம் ரிலையன்ஸ் நிறுவபத்தின் தலைவர் நீதா அம்பானிக்கு ‘வருகை தரு பேராசிரியராக’ செயல்படுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். எனினும் அந்த அழைப்பு ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்தது.

நீதா அம்பானியின் அனுமதியை கண்டித்து, பனாரஸ் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் உள்ள துணைவேந்தர் ராகேஷ் பட்நகரின் இருப்பிடம் முன்பு 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியரானார் நீதா அம்பானி – எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

”நீதா அம்பானி எப்படி பெண்கள் முன்னேற்றத்திற்கான எடுத்துக்காட்டாக இருப்பார்? அவர் முகேஷ் அம்பானியின் மனைவி அவ்வளவே. வாழ்க்கையில் சாதனை செய்த ஹிமா தாஸையோ அல்லது பெண் விளையாட்டு வீரரையோ அல்லது பெண் தொழில்முனைவோரையோ பனராஸ் பல்கலைக்கழகம் தேர்வு செய்திருக்க வேண்டும்” என்று போராட்டம் நடத்திய மாணவர்கள் தெரிவித்தனர்.

‘அம்பானி, அதானியின் நெருக்குதலின் கீழ் பிரதமர் மோடி – விவசாய சங்கத் தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹன்

இந்நிலையில், ”பனராஸ் இந்து பல்கலைக்கழகம், நீதா அம்பானியை வருகைதரு பேராசிரியாக நியமிப்பதற்கான அதிகாரப்பூர்வ முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை” என அறிக்கை வெளியிட்டுள்ளது.

அம்பானி, ஒரு மணிநேரத்தில் சம்பாதித்ததை, தொழிலாளி சம்பாதிக்க 10,000 ஆண்டுகளாகும் – ஆக்ஸ்ஃபாம்

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியாக நீதா அம்பானி நியமிக்கப்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் போலியனவை எனவும், அது போன்ற அழைப்பே பனராஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து வரவில்லை எனவு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்