Aran Sei

கடந்த 5 ஆண்டுகளில் சிஏஜி அறிக்கை தாக்கல் 75% குறைந்துள்ளது – ஆர்டிஐ மூலம் அம்பலம்

டந்த ஆண்டுகளில் இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கைகள் 75 விழுக்காடு அளவிற்கு குறைந்திருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்திருப்பதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கேட்ட கேள்விக்கு கிடைத்துள்ள பதிலின் மூலம், மத்திய அமைச்சகம் மற்றும் துறைகள் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு 55 ஆக இருந்த சிஏஜி அறிக்கைகள், 2020 ஆம் ஆண்டு 14 ஆக குறைந்திருப்பதும், இதன் மூலம் சிஏஜி அறிக்கைகளை அறிக்கைகள் 75 விழுக்காடு குறைந்திருப்பது தெரியவந்ததுள்ளது.

நக்சலைட் இயக்கங்கள் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக : நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் அரசியல் பயணம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த பதிலில், பாதுகாப்புத் துறை தொடர்பாக, கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள சிஏஜி அறிக்கைகள் கணிசமாக குறைந்துள்ளதாக நியூ இந்திய எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 8 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு அது பூஜ்யமாக குறைந்துள்ளதும், 2017 ஆம் ஆண்டு 5 ஆக இருந்த ரயில்வே துறை அறிக்கைகள், கடந்த ஆண்டில் 1 ஆக குறைந்திருப்பதாகவும், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-யிடம் பேசிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜவகர் சிர்கார், மக்கள் பணம் செலவழிக்கப்படுவது தொடர்பாக, தணிக்கை மேற்கொள்ள வேண்டிய முதன்மை பணியில் இருந்து சிஏஜி தவறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

‘பாஜகவுக்கு சுங்கத்துறையும் அமலாக்க துறையும் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றன’ – பினராயி விஜயன் குற்றச்சாட்டு

மிகவும் அசாதாரண நிகழ்வான பணமதிப்பிழப்பு மற்றும் அதனால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் குறித்து சிஏஜி தணிக்கை செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ள சிர்கார், ”1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யபட்டதால் விளைந்த நன்மைகள் என்ன?” என்பதை சிஏஜி ஆராய்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரை தொடர்பு கொண்டபோது இது கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல், 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் ஊழல் ஆகியவை சிஏஜி அறிக்கையின் மூலமே வெளியில் தெரியவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்