மத்திய பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் நடந்துகொண்டிருக்கும் நவராத்திரி திருவிழாவில் துர்கா தேவிக்கு முன் ஆடப்படும் கர்ப்பா நடன பந்தல்கலுக்கு இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என சுவரொட்டிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) ஒட்டியுள்ளது.
இதுவரை 56 பந்தல்களில் ‘இந்துக்கள் அல்லாதவர்களின் நுழைவு தடைசெய்யப்பட்டுள்ளது’ என்று சுவரொட்டிகளை ஒட்டியிருப்பதாக விஹெச்பி கூறியுள்ளது.
விஎச்பியின் ரத்லத் மாவட்ட செயலாளர் சந்தன் சர்மா, இந்து அல்லாத ஆண்கள் துர்கா தேவியை போற்றி நடனமாடும் கர்ப்பா ஆட்டத்தின் பந்தல்களில் நுழைந்து ஆட்சேபனைக்குரிய செயல்களில் ஈடுபடுவதாக கூரியுள்ளார்.
இது தொடர்பாக நிர்வாகம் எந்தப் புகாரும் பெறப்படவில்லை என்றும் ஏதேனும் புகார் வந்தால் நிர்வாகம் சுவரொட்டிகள் பிரச்சினையைக் கவனத்தில் கொள்ளும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Source: NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.